கியாஸ் சிலிண்டர் தீரப் போகுதா.. தீபாவளி நேரத்தில் சிக்கல்.. ஆயில் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு
சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து செல்லும் பணியை ஒப்பந்த அடிப் படையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9ம் தேதி தொடங்கி காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது. தீபாவளி நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையின்றி கியாஸ் சிலிண்டர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய ஆயில் நிறுவனங்களுக்கு துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை எடுத்து செல்லும் பணியை ஒப்பந்த அடிப் படையில் டேங்கர் லாரிகள் மேற்கொள்கின்றன. நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தான் இந்த பணியினை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த அக்டோபர் 9ம் தேதி அறிவித்தது.

வேலை நிறுத்தம்
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி உட்பட தென் மண்டலத்தில் உள்ள 5 முதல் 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அபாயம் எழுந்தள்ளது. அவர்களின் என்னவென்றால், புதிய ஒப்பந்த விதிகளில் (2025-2030 காலத்திற்கான) சில டேங்கர் லாரிகளுக்குப் பணி அனுமதி மறுக்கப்படுவதைத் திருத்த வேண்டும், குறிப்பாக தகுதியான அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே உரிமையாளர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
லாரி உரிமையாளர்கள் கோரிக்கை என்ன
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரியில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
தட்டுபாடு ஏற்படும் அபாயம்
இதன் காரணமாக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் மையங்களுக்குஎல்பிஜி கொண்டு செல்லும் பணி தடைப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்ந்தால், தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலம் முழுவதும் தடையில்லா சமையல் கியாஸ் வினியோகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஆயில் நிறுவனங்கள் தரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவித்திருக்கிறது.
கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம்
இதுசம்பந்தமாக ஆயில் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில் "இந்த வேலைநிறுத்தம் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டு உள்ளது. இது, சட்டவிரோ தமானது. தற்போதைய பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்ய அனைத்து ஆலைகளிலும், வினியோகஸ்தர்களிடமும் இண்டேன், பாரத், எச்.பி. கியாஸ் சிலிண்டர்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து அவசர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஆயில் நிறுவனங்கள், தற்போதைய நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து தடையற்ற கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications