ஆம்னி பஸ், அரசு பேருந்து டிரைவர்கள்.. ஷாக் தரும் வெறும் ஐந்து நாள் ரிப்போர்ட்.. அரசு கவனிக்குமா?
சென்னை: போதிய தூக்கம் இல்லாமல் ஆம்னி மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேலை செய்வதாக தெரிகிறது. ஏனெனில் அண்மைக் காலங்களில் சென்னையில் இருந்து அல்லது சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகள் அல்லது அரசு பேருந்துகள்,பெங்களூரில் இருந்து வரும் பேருந்துகள் டிவைடரில் ஏறி கவிழ்வது அதிகரித்துள்ளது. சில பேருந்துகள் பின்னால் நிற்கும் வாகனத்தில் மோதியும் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த விபத்துக்கள் எல்லாமே போதிய தூக்கம் இல்லாமல் டிரைவர் ஓட்டி சென்றதால் நடந்ததாகவே பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இரவு நேரங்களில் தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ஆம்னி பேருந்துகளையும், அரசு பேருந்துகளையுமே நாடுகிறார்கள்.. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 2,000 முதல் 2,500 பேருந்துகள் வரை வந்து செல்கின்றன. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை 3,500 முதல் 4,000 வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆம்னி பேருந்துகளை பொறுத்தவரை சாதாரண நாட்களில் ஒரு நாளைக்குச் சராசரியாக 1,200 முதல் 1,500 பேருந்துகள் வரை சென்னைக்குள் வந்து செல்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு அல்லது பண்டிகை காலங்களில் இதன் எண்ணிக்கை 2,500-க்கும் மேல் அதிகமாக உள்ளது. இன்னமும் பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தும், சில பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும், கணிசமான பேருந்துகள் வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளிலும் இருந்தும் தினமும் புறப்பட்டு செல்கின்றன. ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகளை சேர்த்து பல்வேறு நகரங்களுக்கு 7000 பேருந்துகள் போகின்றன. அதே அளவு பேருந்துகள் தினமும் சென்னைக்குள் வருகின்றன.
தோராயமாக இந்த பேருந்துகளுக்கு இரண்டு டிரைவர்கள் மாற்று டிரைவர்கள் இருவர் என ஒரு பேருந்து குறைந்தது நான்கு பேர் என்றாலும், 21000 டிரைவர் மற்றும் பணியாற்றுவார்கள் என கணிக்கப்படுகிறது. அவர்கள் போதிய ஓய்வெடுக்கிறார்களா, பேருந்தை அதிக தூரம் ஒரே நபர் ஓட்டிசெல்வது நடக்கிறதா என்ற கேள்விகள் எழுகிறது.
ஏனெனில் அண்மைக்காலத்தில் அடுத்தடுத்து போதிய தூக்கம் இல்லாமல் சென்று டிவைடரில் மோதுவது, முன்னால் செல்லும் வரும் வாகனங்கள் மீது அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் மட்டுமல்ல.. பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகளுமே விபத்தில் சிக்குவது அதிகமாக உள்ளது. தொலை தூர பேருந்துகள் இப்படி விபத்தில் சிக்க போதிய தூக்கமின்மையே முக்கியமான காரணம் என்று பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கடந்த சனிக்கிமை அன்று அதிகாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து சங்கராபரணி ஆற்று மேம்பால தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. வேலூர் அடுத்த அரபாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தடுப்பு சுவரில் மோதியது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதேபோல் அண்மையில் உளுந்துார்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அண்மையில், பூந்தமல்லி-திருவள்ளூர் வழித்தடத்தில் செல்லும் சென்னை மாநகரப் பேருந்து, கோயம்பேடு மெட்டுக்குளம் சந்திப்பு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்திற்குள்ளானது.
அதேபோல் கர்நாடகா அரசின் சொகுசு பேருந்து பெங்களூரில் இருந்து கோவை நோக்கி நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தது கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த இந்த பேருந்து முன்னே சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பின்புறமாக அதிவேகத்தில் மோதியது இதில் பேருந்தின் ஓட்டுனர் உயிரிழந்தார். பயணிகள் காயம் அடைந்தனர்.
மேலே சொன்ன விபத்துக்கள் எல்லாம் வெறும் ஐந்து நாட்களில் நடந்தவை ஆகும். இன்னும் நிறைய விபத்துக்கள் நடந்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் கணக்கிட்டால் ஏராளமான விபத்துக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலையில் மற்றும் சேலம் மற்றும் கோவை நெடுஞ்சாலைகளில் நடந்துள்ளது . இதில் பல்வேறு விபத்துகளுக்கு வேகம் ஒரு காரணம் என்று கூறினாலும், தூக்கமின்மை முக்கியமான காரணம் என்கிறார்கள் பயணிகள்.
போதிய தூக்கம் பேருந்து டிரைவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்றினால் அது அவர்களை மட்டுமின்றி பயணிகளையும் வெகுவாக பாதிக்கும். அதேபோல் சில ஆம்னி பேருந்துகளில ஒரு டிரைவரே 500 கிமீ தூரம் ஓட்டி மதுரை அல்லது கோவைக்கு வருவதையும் காண முடிந்தது. இதுவும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அரசு மற்றும் ஆம்னி பேருந்து நிறுவனங்க கண்காணித்து இதனை முறைப்படுத்தினால் விபத்துக்களை குறைக்க முடியும் என்கிறார்கள் பயணிகள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது பேருந்து ஓட்டுநருக்கு மட்டுமல்ல.. பேருந்தை இயக்கும் நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications