பஸ்சை ஓட்டிக்கொண்டே ஹாயாக சாப்பிட்ட டிரைவர்.. மதுரை ஆம்னி பஸ்சில் பயணிகள் கண்ட அதிர்ச்சி
சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை டிரைவர் உணவு சாப்பிட்டுக்கொண்டே இயக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பஸ்சை டிரைவர் உணவு சாப்பிட்டுக்கொண்டே ஓட்டும் வீடியோவும் இணையதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி கேட்கும் போது வழக்கமாக இப்படித்தான் நான் சாப்பிட்டுக்கொண்டே ஓட்டி வருவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை, குமரி, தென்காசி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை, ஈரோடு, சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் சரியான நேரத்தை பின்பற்ற வேண்டும் என்று வேகமாக ஓட்டுவதாக சில நேரங்களில் பயணிகள் புகார்கள் கூறுவது உண்டு.

ஆம்னி பஸ் டிரைவர்
எனினும் தற்போது பஸ் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் ஒருசில நேரங்களில் டிரைவர்கள் செய்யும் செயல்கள் பயணிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன. அந்த வகையில் தற்போது மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட ஆம்னி பஸ்சில் டிரைவர் உணவை சாப்பிட்டுக்கொண்டே இயக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீகுமரன் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பஸ்சில், டிபன் பாக்சில் இருந்த உணவை சாப்பிட்டுக்கொண்டே இயக்கி இருக்கிறார். பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் போட்டுள்ளனர். இந்த வீடியோ தான் இணையத்தில் பரவி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பஸ்சில் உள்ள பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல் இப்படி செய்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சாப்பிட்டுக் கொண்டே இயக்குவேன்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. மதுரை பேருந்து நிலையத்துக்கு அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் பயணி ஒருவர் டிரைவர் உணவு சாப்பிட்டுக்கொண்டே இயக்கியதை பார்த்துள்ளார். உடனே மற்ற பயணிகளும் டிரைவரிடம் இது பற்றி கேட்டு இருக்கின்றனர். அப்போது அவர் சரியான நேரத்துக்கு பஸ்சை இயக்க வேண்டும் என்பதால் சாப்பிடாமல் வந்துவிட்டதாக கூறினார்.
இப்படி பாதுகாப்பு இல்லாமல் பஸ்சை இயக்குவது சரியாகுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அவர் நள்ளிரவில் பசித்தது என்றால் இப்படித்தான் சில நேரங்களில் பஸ்சில் சாப்பிட்டுக் கொண்டே இயக்குவேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இது பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிறு குழந்தைகள், பெண்கள் என பலரும் பயணம் செய்யும் பஸ்சில் பொறுப்பின்றி இப்படி செய்வது கண்டனத்துக்குரியது என்றும், பயணிகளின் உயிரை பொருட்படுத்தாமல் பஸ்சில் உணவு அருந்தியபடி ஓட்டிய டிரைவர் மற்றும் அந்த பஸ்சின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications