ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு உயர்வு.. நாகர்கோவில் டூ சென்னைக்கு எவ்வளவு?
சென்னை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்கு ரயில்களில் டிக்கெட் கிடைக்காவிட்டால் பயணிகள் பெரிதும் பயணிப்பது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளையே! இதிலும் புக்கிங் ஃபுல்லாகிவிட்டால் மக்களின் அடுத்த தேர்வு ஆம்னி பேருந்துகள்தான்.

தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை காலங்களில் மக்கள் பெரிதும் பயன்படுத்துவது ஆம்னி பேருந்துகளையே! ஏசி வசதி, தூங்குவதற்கான பர்த் வசதி, சாய் தள நாற்காலியிலும் தூங்கும் வசதி என இருப்பதால் இந்த பேருந்துகளை மக்கள் நாடுகிறார்கள்.
இந்த பேருந்துகளில் கட்டணங்கள் என்பது நிலையாக இல்லை என்பதே பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. பண்டிகை காலங்களில் கட்டண கொள்ளை அடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழும். அரசும் அவர்களை எச்சரிக்கும். ஆனாலும் கட்டண கொள்ளை நிறுத்தவே நிறுத்தப்படாது. அது போல் தற்போது தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.

அந்த கட்டணமானது 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. ரெட் பஸ் செயலியில் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல சராசரியாக ரூ 2,650 முதல் 3,420 என டிராவல்ஸ் ஏஜென்சிகளுக்கேற்ப மாறுபடுகிறது. அது போல் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்ல ரூ 750 முதல் 1370 ரூ வரை உள்ளது.
அது போல் மதுரை மாட்டுத்தாவணி டூ சென்னைக்கு வர 1550 ரூபாய் முதல் 2799 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தூத்துக்குடி முதல் சென்னை வரை 1950 ரூபாய் முதல் 2849 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அது போல் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு ரூ 2,349 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.

கோவையிலிருந்து சென்னைக்கு ரூ 2277 முதல் ரூ 3130 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ 1599 முதல் ரூ 2134 வரை வசூலிக்கப்படுகிறது. தொடர் விடுமுறையே ஆம்னி பேருந்துகளின் உயர்வுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே தென் மாவட்டங்களுக்கு விடுமுறைக்காக சென்றவர்கள் இடையூறின்றி பயணம் செய்ய அரசு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications