Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரக்கமே இல்லையா? இந்த வீக் எண்ட் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போறீங்களா? இதை முதல்ல படிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுக்க பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் இந்த செய்தியை கொஞ்சம் படித்துவிடுங்கள்.

தமிழ்நாட்டில் பல காலமாக தனியார் பேருந்துகளின் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் இதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அவ்வப்போது வழங்கி உள்ளது.

ஆனாலும் இதையும் மீறி தனியார் பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி டிக்கெட் விற்பது வழக்கம் ஆகி உள்ளது.

பண்டிகை நாட்கள் என்றால் தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது வழக்கமாகி வருகிறது.

புகார்

புகார்

இது தொடர்பாக மக்கள் பல முறை புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. பொதுவாக தீபாவளி, பொங்கல் வந்தால் இப்படி கட்டணம் உயர்வது வழக்கம். அப்போதெல்லாம் கட்டணங்களை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஆனால் அதையும் மீறி சமயங்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படும். இதன் காரணமாக சில ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு

எவ்வளவு

இந்த நிலையில் தற்போது நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை. அதேபோல் திங்கள் கிழமை சுதந்திர தின விடுமுறை. இந்த 3 விடுமுறைகள் காரணமாக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். முக்கியமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், திருச்சி போன்ற மத்திய மாவட்டங்களுக்கும் மக்கள் பலர் செல்கிறார்கள். பெங்களூரில் இருந்தும் கூட பலர் ஊருக்கு செல்கிறார்கள்.

உயர்ந்தது

உயர்ந்தது

இதை பயன்படுத்தி தற்போது ஆம்னி கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. உதாரணமாக திருச்சி டூ சேனை கட்டணம் 800 ரூபாய்க்கு பதிலாக 2400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் பெங்களூர் டூ தஞ்சாவூர் கட்டணம் 1000 ரூபாய்க்கு பதிலாக 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை டூ கோவைக்கு 1000 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் 3000 ரூபாயாக உயர்ந்து உள்ளது. நெல்லைக்கு சென்னையில் இருந்து 4000 ரூபாய்க்கு கூட டிக்கெட் விற்கப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

இதை மக்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். போக்குவரத்து துறை இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பலர் சுதந்திர தினத்திற்கு சொந்த ஊருக்கு செல்ல நினைத்தாலும் கட்டணம் அதிகம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அரசு பேருந்துகளை தமிழ்நாடு அரசு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+