சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது.. அரசுக்கு பஸ் உரிமையாளர்கள் வைத்த 5 கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்களது ஐந்து கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்முழு ஊரடங்கு ரத்தான முதல் நாளே.. ஏற்காடு மலைக்கு இ பாஸின்றி குவிந்த மக்கள்.. கொரோனா பரவும் அபாயம்

ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகள்

ஆனால் வழிகாட்டு நெறிமுறையின் படி 50 சதவீதம் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டியது அவசியம் என்கிற நிலையில், தங்களுக்கு லாபம் இருக்காது என்று கூறி நாளை ஆம்னி பேருந்துகள் நாளை பேருந்து இயக்கப்படாது என்று அறிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரையிலும் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பேருந்தை இயக்க மறுப்பு

பேருந்தை இயக்க மறுப்பு

இந்தியாவில் 10 சதவீதத்திற்கும் அதிமாகச் சாலை வரி விதிக்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பேருந்துகளை இயக்காத காலங்களுக்கும் சாலைவரி விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேருந்தை இயக்க மறுத்துள்ளனர்.

சாலை வரி ரத்து

சாலை வரி ரத்து

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் செப்.30 வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். ஆம்னி பேருந்துகளை 100% பயணிகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

ஐந்து கோரிக்கைகள்

ஐந்து கோரிக்கைகள்

குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அந்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசு தங்களது . கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

English summary
The Omni Bus Owners Association has decided not to operate Omni buses until September 30. They have 5 demands including to allow those to run Omni buses with AC facility.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X