Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்னி பஸ்களை.. அலறவிட்ட தமிழக அரசு.. "102 பஸ்கள்"..பின்னாடியே கோட்டைக்கு போன கோரிக்கை.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில், விதிமுறைகளை மீறியதாக, ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல், புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் அதிகமாகிவிடுவது இயல்பாகிவிட்டது. இப்போதும் அதே குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

தற்போது பண்டிகை காலம் துவங்கி உள்ளது.. 4 நாட்கள் ஆயுத பூஜை, வார இறுதி விடுமுறை என்பதால், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகிறார்கள்.
போக்குவரத்து கழகம்: பயணிகளின் வசதிக்காகவே, தமிழக அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனாலும், இந்த பஸ்களிலும், புக்கிங் ஏற்கனவே முடிந்து விட்டது.. அதனால்தான், பலரும் ஆம்னி பஸ்களை நாடி சென்றுவருகிறார்கள்.. வழக்கம்போல், இந்த வாய்ப்பை ஆம்னி பஸ்கள் பயன்படுத்தி பல மடங்கு கட்டணத்தை ஏற்றிவிட்டதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

Omni Buses that dont break the rules, All Omni Bus Owners Association letter to Tamil nadu CM Stalin

ஒவ்வொரு பண்டிகை நிகழ்வின்போதும், ஆம்னி பஸ்களின் கட்டணம் குறித்த புகார்கள் அரசுக்கு சென்றபடியே உள்ளன.. இதுகுறித்து தமிழக அரசும், விதிமுறைகளை மீறக்கூடாது என்று எச்சரித்தபடியே உள்ளது. அப்படித்தான், இந்த முறை எந்த புகாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சமீபத்தில், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு, தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில், கூட்டம் நடத்தி அறிவுறுத்தப்பட்டது.

கட்டண கொள்ளை: எனினும், கட்டண கொள்ளையைத் தடுக்க முடியவில்லை என்றே தெரிகிறது.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறையினர், பரவலாக ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.. அந்த பஸ்களில் பயணித்த பயணிகளிடம், வசூலிக்கப்பட்ட கட்டண விபரங்களை சேகரித்ததில், கட்டணங்களில் விதிமீறல் நடந்ததும் தெரியவந்தது.

Omni Buses that dont break the rules, All Omni Bus Owners Association letter to Tamil nadu CM Stalin
.

அந்தவகையில், கடந்த 18ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரையிலான, 4 நாட்களில், 8,635 பஸ்கள் சோதனை செய்யப்பட்டதில், 1,545 பஸ்களில் விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மொத்தம் 27 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 15 லட்சம் லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதைத்தவிர, 102 ஆம்னி பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறந்த கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில், போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படாத ஆம்னி பஸ்களை விடுக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அ.அன்பழகன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன. இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம்.

ஆம்னி பஸ்கள்: கடந்த 10 நாட்களாக சென்னை, அண்ணா நகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிப்பில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மிகாமல் பேருந்துகளை இயக்கி வந்தோம். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 102 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வழியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

Omni Buses that dont break the rules, All Omni Bus Owners Association letter to Tamil nadu CM Stalin

இதற்கு, மண்டல அலுவலகங்களில் குறைந்தபட்சம் 10 ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையே காரணம்.

விடுவிக்க வேண்டும்: அதன்படி, தவறிழைக்காத ஆம்னி பேருந்துகளைகூட சிறைபிடித்துள்ளனர். இதனால் முன்பதிவு செய்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு பேருந்து சேவை அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதே நிலை நீடித்தால் விழா காலங்களில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே, தவறிழைக்காமல் இயங்கும் பேருந்துகளைத் தடை செய்யாமல் அவற்றை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+