வேலையை வேகமாக்குங்க.. வருது கிளாம்பாக்கம் அருகே புது பஸ் நிலையம்.. ஆம்னி பஸ்களுக்கு செம வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. ஆனால் சென்னை சிட்டிக்குள் சென்று மக்களை ஏற்றி இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு கோர்ட் அனுமதி வழங்கி உள்ளது.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு முனையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சில பேருந்துகள் அதற்கென உள்ள பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதாகவும், அப்படி செய்ததால் கடுமையான நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Omni buses to get new bus stand near Mudichur in swift manner as Kilaampakkam Bus Stand opens

இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கான கட்டுமானம் தற்போது துரிதமாக நடந்து வருகிறது.

புதிய பேருந்து நிலையம்: இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும் என CMDA தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.

அதுவும் அடுத்த மாதமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் கட்டுப்பாடு, இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியாரின் புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசு பேருந்துகள் உள்ளே வராது என்பதால் அதற்கான புக்கிங் வெகுவாக குறைந்ததை அடுத்து ஆம்னி பேருந்துகளை இனி உள்ளே வர விடக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உள்ளே வருவதற்கு ஆம்னி மட்டுமே ஒரே வழி என்பதால் மக்கள் பலரும் அதையே விரும்புகிறார்கள் என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம். இதை சரிகட்டவே புதிய பேருந்து நிலையம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் மக்களின் வசதிக்காகவும், சென்னைக்குள் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த ஜனவரியில் பயன்பாட்டுக்கு வந்தது. இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம்.விரைவில் ஆம்னி பேருந்துகளுக்கான பஸ் ஸ்டாண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+