Omni Bus Strike: வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கப்படாது - உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை சாலை வரி கட்டாததால் கேரள போக்குவரத்து துறையினர் சிறைபிடித்து ரூ. 70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்தனர். இதேபோல, கடந்த ஒரு வாரமாக கர்நாடக போக்குவரத்து துறையும் அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் இயக்கப்படாது. தமிழகத்திற்குள் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சொகுசுப் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் ஏ.ஜெ.ரிஜாஸ், தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஆபரேட்டர்கள் சங்க தலைவர் ஜெயம் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்குச் சென்ற 100க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் தமிழ்நாட்டை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று கடந்த 7 நாட்களாக கர்நாடக போக்குவரத்து துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை தடுத்து ஒவ்வொரு பஸ்ஸுக்கும் ரூ. 2.20 லட்சம் வரை அபராதம் விதித்து மொத்தம் ரூ. 1.15 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
இதற்கு அண்டை மாநிலங்கள் கூறும் காரணம் '2021-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட 'ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்'டின்படி தமிழ்நாட்டில் இன்று (நேற்று) வரை அண்டை மாநில பஸ்களுக்கு சாலைவ ரி வசூலிக்கிறார்கள், எனவே நாங்களும் வசூலிக்கிறோம்' என தெரிவிக்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கைகளின் காரணமாக ஆபரேட்டர்கள் இரட்டை வரியும், அபராதங்களும் செலுத்த இயலாத சூழலில் உள்ளோம்.
இந்த நிகழ்வை தொடர்ந்து 7-ந் தேதி இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறோம். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்பு அடைந்து மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு காலாண்டுக்கு (90 நாட்கள்) தமிழக சாலைவரி ரூபாய் ரூ.1,50,000, ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் சாலை வரி ரூ.90,000 மற்றும் கேரளா, கர்நாடகா சாலை வரி சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் காலாண்டுக்கு ரூ.4.50 லட்சம் செலுத்தி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த பிரச்சனையால் 10-ந் தேதி (இன்று) மாலை 5 மணி முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் எல்லா விஷயங்களிலும் முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு முதல்வர் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் பேசி அந்த மாநில பஸ்களுக்கும் சாலை வரியில் விலக்களித்து அண்டை மாநிலங்களுக்கு சீராக பஸ்கள் இயக்க வழிவகையை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையே ஓடக்கூடிய 600 பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் இயக்கப்படாது. தமிழகத்திற்குள் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications