தென்தமிழக பயணிகளே கவனம்.. சென்னை கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் - புதிய அறிவிப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி தென்தமிழக மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் சென்னை கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை தடுக்க கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பிறகு கோயம்பேடு பஸ் நிலையம் மூடப்பட்டது. அனைத்து பஸ் சேவைகளும் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் போதவில்லை. இதையடுத்து முடிச்சூரில் கட்டப்பட்ட பஸ் நிலையம் ஆம்னி பஸ்களுக்கு வழங்கப்பட்டது. அங்கும் 150 பஸ்களுக்கு மட்டுமே இடம் உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து மீண்டும் ஆம்னி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தான் கோயம்பேடு மற்றும் போரூரில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என்று அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுபற்றி அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை முதல்வர் நேற்று முன்தினம் (டிச.06) திறந்து வைத்தார். இந்தப் பேருந்து நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம். ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும். மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் இசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம். இந்த பேருந்து நிலையம் அந்த பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications