கேளம்பாக்கம் டூ கோவளம் சாலை துண்டிப்பு.. ஆறு போல் வெள்ள நீர் சூழ்ந்த ஓஎம்ஆர் சாலை!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் படூர், கேளம்பாக்கம், நாவலூர், செம்மேஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் ஆற்று வெள்ளம் போல் சாலையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
Recommended Video
தொடர் மழையால் திருப்போரூர் முருகன் கோவிலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் பாதை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர்
அங்குள்ள விஜயசாந்தி தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுள் தண்ணீர் புகுந்ததால் அனைத்தையும் சாலையோரங்களில் நிறுத்தி பாதுகாத்து வருகின்றனர். திருப்போரூரிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்வோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம்
மழை நீர் தேங்கியுள்ளதை ஊராட்சி நிர்வாகம் விரைவில் சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கேட்டுக் கொண்டுள்ளனர். கேளம்பாக்கம் டூ கூடுவாஞ்சேரி வரை நல்ல மழை பெய்து வருகிறது. கோவிலம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பூந்தமல்லி
இதனால் அந்த பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அது போல் பூந்தமல்லி பகுதியில் போரூர், நசரத்பேட்டை, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆவடி , அம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் அதிகளவு தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

200 குடியிருப்புகள்
சென்னை- போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பரணிபுத்தூர் ஜானகிராம் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேல் மழைநீர் இப்பகுதியை சுற்றிலும் மார்பளவு தேங்கி உள்ளதால் வெளியே வர முடியாமல் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications