வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு.. கறுப்பு பட்டை அணிந்து ரமலான் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
சென்னை: இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதற்காக பல்வேறு பகுதிகளிலும் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே திருப்பத்தூர் பகுதியில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பை பட்டை அணிந்து தொழுகை நடத்தினர்.
இன்று இஸ்லாமிய மக்கள் நாடு முழுக்க ரமலானை கொண்டாடி வருகிறார்கள். ரமலான் மாதம் முழுக்க நோன்பைப் பின்பற்றும் இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாடுவார்கள். இது இஸ்லாமியர் நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்குவதைக் குறிக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும், ரமலானை முன்னிட்டு நாடு முழுக்க இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை, நெல்லை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருப்பத்தூர் பகுதியில் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பை பட்டை அணிந்து தொழுகை நடத்தினர்.
தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்திற்கு மாற்றாக புதிய வக்பு வாரிய சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து இருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications