திருமாவளவன் மணி விழா! நாகூரிலிருந்து வந்த ஸ்பெஷல் பால்கோவா! தாய்மண் அலுவலகத்தில் சிறப்பு துஆ!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாளை தனது மணிவிழாவை கொண்டாடும் நிலையில் நாகூர் தர்காவின் பரம்பரை கலீஃபா மஸ்தான் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் சிறப்பு து ஆவும் செய்துள்ளார்.
கூடவே நாகூரிலிருந்து ஸ்பெஷல் பால்கோவா பாக்ஸ் ஒன்றையும் வாங்கி வந்து திருமாவளவனுக்கு அவர் பரிசளித்திருக்கிறார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா எந்தளவு பிரபலமோ அதேபோல் நாகை, காரைக்கால் பகுதிகளில் நாகூர் இனிப்புக்கடை பலகாரங்கள் பேமஸ் ஆகும்.

விசிக தலைவர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாளை தனது மணிவிழாவை கொண்டாடுகிறார். இதற்காக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க தமிழகம் முழுவதும் இருந்தும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னையில் குவிந்துள்ளனர். முன்னதாக இன்று விசிக சார்பில் நடத்தப்படும் மணி விழா நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். இதனிடையே நாகூர் தர்காவின் பரம்பரை கலீஃபா மஸ்தான் காதிரி விசிக தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

நாகூர் இனிப்புகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாய்மண் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் திருமாவளவனுக்கு நாகூர் ஸ்வீட்ஸ்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், திருமாவளவன் பெயரோடும், புகழோடு, நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழ வேண்டும் என நாகூர் தர்கா கலீஃபா மஸ்தான் சிறப்பு து ஆ செய்தார். அந்த து ஆவில் திருமாவளவன், விசிக சிறுபான்மை பிரிவு நிர்வாகி அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை தொகுதி
நாகூர் கலீஃபா மஸ்தான் காதிரி திருமாவளவனை சந்தித்த போது அந்த இடத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸை காண முடியவில்லை. நாகை தொகுதியில் விசிகவை சேர்ந்த ஆளுர் ஷாநவாஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். தனது தொகுதியிலிருந்து ஒரு விஐபி கட்சியின் தலைவரை சந்திக்க வரும் போது அந்த இடத்தில் ஆளுர் ஷநவாஸ் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அங்கு இல்லாததற்கு என்ன காரணம் என்ற விவரம் தெரியவில்லை.

பல முக்கியஸ்தர்கள்
நாகூர் கலீஃபாவை போல் இன்னும் பல முக்கியஸ்தர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து மணிவிழா வாழ்த்து கூறி வருகிறார்கள். நாளைய தினம் கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து அவர்களது வாழ்த்துகளை ஏற்கவிருக்கிறார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications