ரூ.1000-யை செலவு செய்வது எப்படி? சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் துரை முருகன்.. ஆளுநரிடம் பரபர புகார்
சென்னை: அரசு வழங்கும் ரூ.1000-யை பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோ வெளியாக விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அமைச்சர் துரைமுருகன் மீது நடவடிக்கை கோரி ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் துரை முருகன். நீர்ப்பாசனம் மற்றும் கனிம வளத்துறையை அவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் துரை முருகன் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது.

அதாவது வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் துரை முருகன் பேசிய 40 வினாடி ஓடும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் குடும்ப பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றி சில விஷயங்களை அவர் பேசியுள்ளார்.
இதுபற்றி துரை முருகன், ‛‛செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்க போகிறோம். நீங்களே உங்கள் செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவர்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம்'' என்றார்.
மேலும், ‛‛உங்கள் பெண் வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். பஸ்சுக்கு அம்மாவிடம் போய் கேட்காதே. நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே. ஒரு செல்போன் வாங்கி வச்சுக்கோ. அதுல நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு என்று அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்'' என பேசி இருந்தார்.
இந்த பேச்சு தான் சர்ச்சையை கிளப்பியது. பெண்கள் மற்றும் மாணவிகள் பற்றி தவறான நோக்கத்தில் பேசிய அமைச்சர் துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான பெரம்பூரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் ஆளுநர் ஆர்என் ரவி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி உள்ளார். இதுதொடர்பான புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு வழங்கும் ரூ.1000-யை கல்லூரி மாணவிர், பெண்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் அமைச்சர் துரை முருகன் இதுபற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். பெண்களுக்கான மரியாதை குறைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. இதுபற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து துரை முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கும் பதிவு செய்ய வேண்டும். அதோடு இந்த புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications