ரூபாய் குறியீடு- இதே மார்ச் 13- 1975-ல் தமிழக தனிக் கொடி ஏற்றி இந்தியாவையே அதிர வைத்த கருணாநிதி!
சென்னை: ரூபாய் குறியீட்டில் பயன்படுத்தப்பட்ட தேவநாகரி எழுத்தை மறுத்து ரூ என்ற தமிழ் எழுத்தை பயன்படுத்துவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13-ல் அறிவித்தார். 1975-ம் ஆண்டு இதே மார்ச் 13-ந் தேதி முதல்வர் ஸ்டாலினின் தந்தையான மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டுக்கான தனிக் கொடியை மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஏற்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்கிறார் திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன்.
இது தொடர்பாக விடுதலை க.ராசேந்திரன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ரூபாய்க்கு பயன்படுத்தப்பட்ட தேவ நாகரி எழுத்தை தவிர்த்து ரூ என்ற தமிழ்ச்சொல்லை முதல்வர் அறிமுகப்படுத்தி இருக்கிறார் இதே நாளில் 1975 மார்ச் 13ஆம் நாள் முதல்வராக இருந்த கலைஞர் வெளியிட்ட ஒரு அறிவிப்பை அன்றைய ஒன்றிய அரசு மறுத்திருக்கிறது தேசியக்கொடிக்கு பதிலாக தமிழ்நாட்டிற்கு தனிக்கொடி வேண்டும் என்று முதல்வர் கலைஞர் திட்டமிட்டார் மாநில காவல்துறை தலைமைஅலுவலகத்தில் தேசியக் கொடிக்கு பதிலாக மாநில அரசின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது அன்றைய காங்கிரஸ் ஆட்சி இதை ஏற்க முடியாது மாநிலங்கள் தனி க்கொடியை பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் வழியாக எதிர்ப்பை தெரிவித்தது இதே நாளில் தான் ;மாநில உரிமைக்காக திராவிட இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கிறது இப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாநில உரிமை போராட்டத்தை முன்னெடுத்து இந்தியாவையே கவனிக்க வைக்கிறார் திராவிட இயக்கத்தின் இந்த உரிமைப் போராட்டம் வழி வழியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு விடுதலை க. ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்
முன்னதாக தமிழ்நாடு அரசின் இந்த ரூபாய் குறியீடு மாற்றதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிர்மலா சீதாராமன், நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 ஆவணங்களில் இருந்து அதிகாரப்பூர்வ ரூபாய் சின்னமான '₹' ஐ நீக்கியுள்ளதாக திமுக அரசு அறிவித்துள்ளது.
திமுகவிற்கு உண்மையிலேயே '₹' உடன் பிரச்சனை இருந்தால், 2010 ஆம் ஆண்டு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ், மத்தியில் ஆளும் கூட்டணியில் திமுக இருந்தபோது, இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
'₹' - இந்தச் சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.

மேலும், ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும் 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சொல் பல நூற்றாண்டுகளாக தமிழ் வர்த்தகம் மற்றும் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது, இன்றும் கூட, 'ரூபாய்' என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நாணயப் பெயராகவே உள்ளது.
இந்தோனேசியா, மாலத்தீவுகள், மொரிஷியஸ், நேபாளம், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக 'ரூபாய்' அல்லது அதன் சமமான பெயர்களை தங்கள் நாணயப் பெயராகப் பயன்படுத்துகின்றன.
'ரூபாய்' என்ற சொல், சமஸ்கிருதத்தில் தோன்றியதால், தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் பகிரப்பட்ட கலாச்சார, பொருளாதார மரபாகும் என்பது தெளிவாகிறது.
ரூபாய் சின்னம் '₹' என்பது சர்வதேச அளவில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிதிப் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் அடையாளமாக செயல்படுகிறது. UPI ஐப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் நேரத்தில், நாம் நமது தேசிய நாணய சின்னத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டுமா?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் விதமாக அரசியலமைப்பின் கீழ் உறுதிமொழி எடுக்கிறார்கள். மாநில பட்ஜெட் ஆவணங்களில் '₹' போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது அந்த உறுதிமொழிக்கு எதிரானதாகும், மேலும் இது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது.
இது வெறும் குறியீட்டுவாதம் மட்டுமல்ல - இது இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்தி, பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாகவும் இது உள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications