நடிகை கவுதமியிடம் நிலமோசடி.. தலைமறைவான நபரை தட்டித்தூக்கிய போலீஸ்.. யார் இந்த பலராமன்?
சென்னை: நடிகை கவுதமியின் சொத்தான நிலத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நடிகை கவுதமி பாஜகவில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் திடீரென்று அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு தனது சொத்துகளை சிலர் மோசடி செய்து விற்பனை செய்துவிட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.

குறிப்பாக பாஜகவை சேர்ந்த நிர்வாகி மீது அவர் குற்றம்சாட்டியதோடு, இந்த விவகாரத்தில் பாஜக கட்சி தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அதாவது தனக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, பவர் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி பாஜகவைச் சேர்ந்த கோட்டையூர் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விற்றுவிட்டதாக கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துகளை அழகப்பன் அபகரித்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து அழகப்பனை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் அழகப்பனை தீவிரமாக தேட தொடங்கினர். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரது பெயர் பலராமன். வயது 64 ஆகும். இவர் நடிகை கவுதமியின் சொத்தை அதிக விலைக்கு விற்று அவருக்கு குறைந்த பணத்தை மட்டுமே வழங்கி ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.
அதாவது திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடி விற்பனை செய்த அவர் கவுதமிக்கு வெறும் 4.10 கோடி மட்டும் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த நடிகை கவுதமி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications