நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் விபத்து... லைட் கீழே விழுந்து பணியாளர் படுகாயம்
சென்னை: நடிகர் விஜய்யின் 63-வது படத்தின் படப்பிடிப்பில் ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் மின் பணியாளர் படுகாயம் அடைந்தார்.
நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் தனது 63 படத்தில் நடித்து வருகிறார். இதில் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு, இந்துஜா உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த படத்தில் நடித்த துணை நடிகை அட்லீ தன்னை தாக்கியதாக புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த ஃபோக்கஸ் லைட் தவறி விழுந்ததில் கீழே நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விஜய் 63 படத்தில் விபத்து ஏற்பட்ட சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications