வெறும் 7 நிமிஷம்.. பொசுக்குனு இப்படியொரு சர்ப்ரைஸ்? மகிழ்ச்சியில் துள்ளும் சென்னை.. நாளைக்கு நிம்மதி
சென்னை: கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், மெட்ரோ நிறுவனம் மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.

மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளால் தவிர்க்கவே முடியாதது.. அதனால்தான் மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.
அடையாள அட்டை: முக்கியமாக, மெட்ரோ ரயிலில் 100 ரூபாய்க்கு சிறப்பு பயண அட்டை மூலம் ஒரு நாள் முழுவதும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு உட்பட Phonepe மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட்களையும் பெற்றுக்கொள்ளும்படியான வசதி வரை அமலில் உள்ளது..
அதேபோல, 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.. அந்தவரிசையில், வெறும் 5 ரூபாயில், சென்னையின் எந்த பகுதிக்கும் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளலாம் என்ற இன்னொரு அதிரடியையும் அறிவித்திருந்தது.
அடுத்த அதிரடி: இதுபோலவே, வெறும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பானது, மக்களை கவர்ந்திருந்தது. காரணம், 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை விம்கோ நகர், விமான நிலையம் போன்ற பகுதிகளில் மெட்ரோ சேவையானது 7 நிமிடங்களில் இயக்கப்பட்டது.

இன்னும் இதுபோல பல்வேறு வசதிகளையும், சலுகைகளையும் மெட்ரோ செய்துவருவதால்தான், பயணிகளின் ஆதரவை பெற்றுள்ளது.. இதனால், நாளுக்கு நாள் மெட்ரோவில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. அந்தவகையில், இப்போதும் ஒரு அதிரடியை அறிவித்திருக்கிறது.
கோடம்பாக்கம்: சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மமணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் வசதிக்காக நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.. அனைத்து பயணிகளும் தங்களின் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும்" என்றும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர் அவதி: சென்னையை பொறுத்தவரை, மின்சார ரெயில்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருவதாக பயணிகள் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது..
இப்படிப்பட்ட சூழலில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள், கடந்த 3 வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இப்போது 4வது வாரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்களின் வசதிக்காக 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது, சென்னைவாசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications