திமுக ஆட்சிக்கு பெரியார் பல்கலை.யால் அடுத்தடுத்து சோதனை- அண்ணா பெயரையே தப்பா பிரிண்ட் அடிச்ச கொடுமை!
சென்னை: சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பெயரை வினாத்தாளில் தவறுதலாக பிரிண்ட் செய்திருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக் கழகம்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.இந்த விவகாரத்தை தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விரிவான விளக்கமும் அளித்திருந்தார்.

மேலும் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜாதி தொடர்பான வினாத்தாள் இடம் பெற்றது குறித்து உயர் கல்வித் துறை சார்பில் உயர் அலுவலர் நிலையில் குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையில் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும் என உயர் கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் தெரிவித்தார்
பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி தொடர்பான கேள்வி வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள் தற்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது . பிஏ அரசியல் பொருளாதார பாடத்திற்கான தேர்வில் தமிழ்நாட்டின் அண்ணாதுளை ஆட்சியின் சாதனை பற்றி விவாதிக்க என்று பிழையுடன் வினாத்தாள் வெளியாகி உள்ளது அதிர்ச்சிக்கு உள்ளக்கி உள்ளது .
திமுக ஆட்சியில், திமுகவின் நிறுவனர் பெயரையே ஒரு பல்கலைக் கழகம் தவறாக வினாத்தாளில் அச்சிட்டிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. அதேபோல பிஏ வரலாறு பாடத்தில் கொள் குறி வினா பதில்களும் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு காண பதில் என 1982 1824 1823 1825 என்ற தவறான விடைகளை இடம் பெற்றுள்ளது இதற்கு சரியான பதில் 1828 ஆகஸ்ட் 20 என்பதாகும்.
இப்படித் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புக்கான பாட வினாத்தாளில் தவறான பதில்கள் பிழைகள் வெளியாகி உள்ள நிலையில் வினாத்தாள் ஆய்வு குழுவின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications