"டார்கெட் 10".. ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த பாஜகவின் பகிரங்க பிளான்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு பகிரங்கமாக முயற்சி எடுக்க தொடங்கி உள்ளது. இதற்காக மத்திய அரசு குழுவையும் கூட அமைத்து உள்ளது. இந்த குழுவை அரசு அமைப்பதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று வந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கூறி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதன்படி லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சில மாநில தேர்தல்களோடு சேர்த்து நடத்தவும், இதன் மூலம் ஒரே நாடு தேர்தல் முறையை கொண்டு வரவும் பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த வருட இறுதியிலேயே லோக்சபா தேர்தல் வரலாம் என்கிறார்கள். பல மாநில தேர்தல்களோடு சேர்ந்து இந்த தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில்தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார்.
என்ன காரணம்? : இந்த குழுவை அரசு அமைப்பதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. பல மாநில தேர்தல்களோடு சேர்த்து ஒரே நேரத்தில் லோக்சபா தேர்தலை நடத்தலாம். இதற்காக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம்.
2. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பத்து மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடையும். இதை எல்லாம் சேர்த்து இந்த வருட இறுதியிலேயே முன்கூட்டியே தேர்தல் நடத்தலாம்.
3.மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
4. பின்வரும் மாநிலங்களில் சட்டசபை முடிவிற்கு வரும் தேதிகள் பின்வருமாறு: . மிசோரம்: டிசம்பர் 2023 2. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா: ஜனவரி 2024 3. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம்: ஜூன் 2024 4. ஹரியானா, மகாராஷ்டிரா: நவம்பர் 2024 5. ஜார்கண்ட்: டிசம்பர் 2024 6. : பிப்ரவரி 2025 7. பீகார்: நவம்பர் 2025 8. அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம்: மே 2026 9. புதுச்சேரி: ஜூன் 2026 10.கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட்: மார்ச் 2027 11.உத்திரப் பிரதேசம்: மே 2027 12. குஜராத், இமாச்சல பிரதேசம்: டிசம்பர் 2027 13. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா: மார்ச் 2028 14. கர்நாடகா: மே 2028
5. இந்த 10 மாநிலங்கள் டார்கெட் + லோக்சபா தேர்தல் இதுதான் பாஜகவின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
6.தேசிய அளவில் மோடிக்கு பெரிய ஆதரவு உள்ள நிலையில் மாநில தேர்தல்களை சேர்த்து நடத்தினாலும், மாநிலங்களிலும் பாஜக வெல்லும் என்று பாஜக தரப்பு கருதுகிறது. லோக்சபா தேர்தலில் ஓட்டு போடும் மக்கள் சட்டசபை தேர்தலிலும் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பாஜக கருதுகிறது. இதுவே இந்த திட்டத்திற்கு காரணம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications