ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு!
சென்னை: "ஒரே நாடு ஒரே தேர்தல்" (One Nation One Election) என்பது ஒரு நோயைக் குணப்படுத்த அதைவிடக் கொடுமையான ஒரு மருந்தைத் தருவதற்கு சமம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல்களை நடத்துவதில் இருக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்காக ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே முடக்க நினைப்பது தவறு என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பது நோயை விட மோசமான மருந்து என தெரிவித்துள்ளார். அந்த வகையில், ONOE நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கத்தையே தலைகீழாக மாற்றுகிறது மற்றும் சட்டமன்ற பொறுப்புணர்வை பலவீனப்படுத்துவதை நோக்கி இந்தியாவை நுட்பமாக மாற்றுகிறது.
இது சட்டமன்ற நம்பிக்கை சரிந்துவிட்டதால் அல்ல, மாறாக தேசிய தேர்தல் நாட்காட்டியுடன் ஒத்துப்போகும் வகையில் மாநில ஆணைகளை துண்டிக்க அனுமதிக்கிறது. ஒத்திசைவு என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்தை நீடிக்கச் செய்வதன் மூலம் கூட்டாட்சி முறையை மீறும் அபாயமும் உள்ளது. அரசியலமைப்பு சமநிலையையும், அதிகாரத்தை பொறுப்பேற்க வைக்கும் மக்களின் உரிமையையும் பலி கொடுத்து, நிர்வாக வசதிக்காக இந்தியாவின் ஜனநாயகம் மறுவடிவமைப்பு செய்யப்படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையால 'மீதமுள்ள பதவிக்கால' தேர்தல்களின் சிக்கல்கள் குறித்து மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகையில், இதில் மிகவும் கவலையளிக்கும் அம்சம், எஞ்சியிருக்கும் பதவிக்காலத்திற்கான இடைக்காலத் தேர்தல்கள் ஆகும். அரசியலமைப்பு 'எஞ்சிய ஆணை' (residual mandate) என்ற கருத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications