அடுத்த அதிரடி! ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நாளை தனித் தீர்மானம்
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறார்.
ஒரே தேர்தல் என்பது லோக்சபாவிற்கும் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகளை செலுத்த வேண்டும். சட்டசபைக்கும் லோக்சபாவிற்கும் ஒரே தேர்தல் நடத்துவதால் அரசுக்கு தேர்தலுக்கான செலவு குறையும் என்று கூறப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல.

கடந்த 1967 ஆம் ஆண்டு லோக்சபாவிற்கும் சட்டசபைக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் தனித்தனியே நடைபெற்றது 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மோடி வலியுறுத்தி வருகிறார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறார். அதாவது நாளை நடைபெறுகிற சட்டப்பேரவையில், முதல்வர் ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்த திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. மற்றொரு தீர்மானமாக 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் என இரண்டு தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளதாக தெரிகிறது. இந்த தீர்மானங்களின் மீது எம்எல்ஏக்கள் விவாதித்து அதற்கு பிறகு அவை நிறைவேற்றப்பட உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications