ஒரே ஒரு REEL.. ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் BLAST! அரபு தடைகளை தாண்டி.. தட்டித் தூக்கும் ‘துரந்தர்’
சென்னை: நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இப்படம், உலக அளவில் இதுவரை ரூ. 552.70 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டாம் வாரத்தில் ஏற்பட்ட வசூல் உயர்வு காரணமாக, இந்த வார இறுதிக்குள் படம் ரூ. 750 கோடியை நெருங்கும் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன.
பாகிஸ்தானில் உளவுப்பணி மேற்கொள்ளும் இந்திய ராணுவ வீரரின் கதையை மையமாக வைத்து உருவான 'துரந்தர்', உண்மைச் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3.30 மணி நேர நீளமுள்ள இந்த திரைப்படம், பெரும்பாலும் பாகிஸ்தானில் நடைபெறும் காட்சிகளைக் கொண்டிருந்தாலும், திரைக்கதையில் பெரிய தொய்வு இல்லாதது படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. ஆரம்ப நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், எதிர்பாராத விதமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய் கன்னாவின் நடன காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது படத்தின் போக்கையே மாற்றியது.
இன்ஸ்டாகிராமில் அக்ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 'துரந்தர்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கணிசமாக உயர்ந்தது. இதன் விளைவாக இரண்டாம் வாரத்தில் வசூல் வேகமாக உயர்ந்து, படம் தற்போது 550 கோடி கிளப்பில் இடம்பிடித்துள்ளது.
Dhurandhar is a brutally honest film that dares to show the truth - the truth that an ecosystem works hard to suppress.
— Vertigo_Warrior (@VertigoWarrior) December 11, 2025
Kudos to Aditya Dhar for an absolute banger of a movie. Akshaye Khanna steals the show. Rakesh Bedi ji is brilliant. A must-watch!pic.twitter.com/n0rodxCHWf
ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ள இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாஸ்வத் சச்தேவ் இசையமைத்துள்ள இப்படம், சில அரபு நாடுகளில் வெளியீடு தடை செய்யப்பட்ட நிலையிலும், உலகளவில் வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications