ஒரு வார்னிங்.. ஒரு ரிப்போர்ட்.. 2 விஷயங்கள்.. அமைச்சர்களை வரச்சொன்ன "ஸ்டாலின்".. பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் செவ்வாய்க்கிழமை நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஸ்டாலினின் மூன்று நாட்கள் கொங்கு பயணம் இன்றோடு முடிவிற்கு வருகிறது. நேற்று திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து இன்று முதல்வர் ஸ்டாலின் ஈரோடு செல்கிறார். அங்கு பல்வேறு கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த மீட்டிங்கிற்கு பின்பாக சென்னை செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதன்பின் வரும் செவ்வாய் கிழமை அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

என்ன பேசப்படும்

என்ன பேசப்படும்

இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கியமான சில விஷயங்கள் பேசப்படும் என்று ஏற்கனவே ஒன்இந்தியா செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம். ஒரு ரிப்போர்ட் மற்றும் அதை மையமாக வைத்து சில ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த மீட்டிங்கில் முதல்வர் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 2 மிக முக்கியமான விஷயங்கள் இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின் இருப்பதாக ஆளும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் முதல்வர் விஷயம் ஒரு வார்னிங்!

ஒரு வார்னிங்

ஒரு வார்னிங்

அதன்படி வட மாநிலங்களில் பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். இவரிடம் கணக்கில் வராத பணம் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இன்னொரு பக்கம் டாஸ்மாக் வருமான வரி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ நெருக்கி வருகிறது. அவரை எப்போது வேண்டுமானாலும் சிபிஐ கைது செய்ய வாய்ப்பு உள்ளது.

தொடரும் ரெய்டு

தொடரும் ரெய்டு

2024 லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க நிறைய ரெய்டுகள் நடந்து வருகின்றன. இன்னும் தென்னிந்தியா பக்கம் மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் வரவில்லை. விரைவில் அந்த ஆணையங்கள் தென்னிந்தியாவிலும் பாஜக ஆளாத மாநிலங்களில் ரெய்டுகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டிலும் இவர்கள் ரெய்டு நடத்த வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே சில அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளன.

வழக்கு

வழக்கு

சில அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. இதன் காரணமாகவே இந்த அமைச்சரவை மீட்டிங் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கில் அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த முறைகேடும் செய்ய கூடாது. டெண்டர்களில் கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களை கவனமாக செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட உள்ளது. வழக்குகள் உள்ள அமைச்சர்களிடமும் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இது போக இன்னொரு ரிப்போர்ட் பற்றியும் ஆலோசனை செய்ய உள்ளனர். இது அமைச்சர்களின் பார்பார்மன்ஸ் ரிப்போர்ட் ஆகும். அமைச்சர்களின் ஒன்றரை வருட செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற ரிப்போர்ட் முதல்வரிடம் உள்ளது. இதை பற்றி ஆலோசனை செய்வார்கள். இதில் சில அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். சில அமைச்சர்களுக்கு பாராட்டுக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மற்றபடி சில பொதுவான விஷயங்களையும் இந்த மீட்டிங்கில் பேச உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+