Exclusive: "வக்பு வாரிய சொத்துகளை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க பாஜக முயல்கிறது!" தடா ரஹீம் ஆவேசம்
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பலரும் இதை எதிர்த்து வருகிறார்கள். இதற்கிடையே நமது ஒன் இந்தியா தளத்திற்கு சிறப்பு பேட்டியளித்த தடா ரஹீம் இந்த விவகாரம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிரந்து கொண்டுள்ளார்.
வக்பு சட்டங்கள் குறித்து ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டியளித்த தடா ரஹீம், "1954இல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், இப்போது பாஜக கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. நாடாளுமன்றத்தை கொண்டு வருவதற்கு முன்பு இதை ஊடகத்தில் லீக் செய்தனர். இதிலேயே பாஜக தில்லுமுல்லு செய்கிறது.
வக்பு இடம் என்றால் என்ன: வக்பு இடம் என்றால் அரசு முஸ்லீம்களுக்கு அளித்த இடம் என பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் பிரிவிணையின் போது பாக். சென்ற இஸ்லாமியர்களின் விட்டு சென்ற இடம் என நினைக்கிறார்கள். ஆனால், இரண்டுமே இல்லை. சொத்து அதிகம் இருக்கும் முஸ்லீம் ஒருவர் ஏழை இஸ்லாமியர்கள் நலனுக்காக தந்த சொத்துகள் தான் இவை. கடவுளுக்காக தனம் செய்த நிலம் என சொல்லலாம்.
இப்போது இந்தியாவில் ராணுவம், ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்பு சொத்துகள் தான் அதிகம் இருக்கிறது. இப்படி தரும் போது உயில் போல ஒன்றை எழுதி வைத்துவிடுவார்கள்.
பெண்கள்: பொதுவாகவே பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்யும் குழுவிற்கு பெண்கள் அதிகம் போக மாட்டார்கள். ஆனால், ஏற்கனவே இப்போது இந்த வக்பு குழுவில் பெண்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், பாஜக ஏதோ பெண்களுக்கு தாங்கள் தான் அதிகம் தருகிறோம் என்பது போல பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். அப்படி அதிகாரம் தருகிறீர்கள் என்றால் ஒரு நான்கு முஸ்லீம் பெண்களை மத்திய அமைச்சராக்கி இருக்கலாமே.
பொய்யான தகவல்: கோயில் சொத்துகள் எல்லாம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், முஸ்லீம் சொத்துகள் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக பேச்சு இருக்கிறது. உண்மையில் அறநிலை துறையை போல தான் இந்த வக்பு வாரியம். இரண்டுமே மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஆனால், பாஜகவினர் தெரிந்தே இந்த பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
முன்பு பள்ளிவாசல்கள் இருக்கும் வக்பு இடம் என்னுடையது என ஒருவர் சொன்னால் அதை விசாரித்து வக்பு வாரியம் தான் இறுதி முடிவை எடுக்கும். ஆனால், இப்போது அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடம் தருகிறார்கள். இதனால் வரும் காலத்தில் பெரிய பெரிய பள்ளிவாசல்கள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பலாம்.
சிக்கல் என்ன: பாபர் மசூதி வழக்கு நீண்ட காலம் செல்ல என்ன காரணம் தெரியுமா.. அந்த இடம் வக்பு கட்டுப்பாட்டில் இருந்த இடம். இந்த வழக்கு பல ஆண்டுகள் நீட்டிக்க இதுவே காரணம். அடுத்து இப்போது காசி, மதுராவில் பிரச்சினையை கிளப்பியுள்ளனர். அவற்றை வக்புவில் இருந்து நீக்கிவிட்டால் அது தனிநபர் இடமாகிவிடும். இரு தனிநபர்களின் பிரச்சினை என்றால் நிலத்தை எளிதாக அபகரிக்க முடியும். மசூதிகளை அபகரிக்கும் திட்டமாகவே இதை பார்க்கிறேன்.
கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்கும் சட்டம்: வக்பு குழுவில் முஸ்லீம் அல்லாதவர்கள் இடம்பெற வேண்டும் என சொல்வதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். பல முக்கிய நகரங்களின் முக்கிய இடங்களிலேயே வக்பு சொத்துகள் உள்ளன. அவை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டே இருக்கிறது. இந்த சொத்துகளை கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்கவே பாஜக இதை செய்கிறது.
சொத்துகளை மட்டும் எடுத்தால் கூட விட்டுவிடலாம்.. இவர்கள் பள்ளிவாசல்களில் புது புது குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். நாட்டில் உள்ள முஸ்லீம்களின் கட்டமைப்பு வலுவாக இருக்கும் நிலையில், அதை உடைக்கவே இப்படி செய்கிறார்கள். வக்பு இடத்தை போராடி வாங்குவதற்கு பதிலாக எளிதாக வாங்கி அங்கே கோயில்களை கட்டலாம் என்பதற்காக இதை செய்கிறார்கள்" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications