இன்ஸ்டாகிராம் வாக்குகள்: திமுகவை முந்தும் தவெக.. 4வது இடத்தில் அதிமுக.. நாடு எங்கே சார் போகுது?
சமூக ஊடகங்கள் என்று பொத்தாம் பொதுவாக பெயரிட்டு நாம் அழைக்கும் சோஷியல் மீடியா தளங்கள் ஒரே மாதிரியான மக்களை சென்று அடைவதில்லை
ஒரே நிறுவனம் என்றாலும், பேஸ்புக் பயனருக்கும், இன்ஸ்டா நெட்டிசனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு வேறுபட்ட எண்ண ஓட்டங்கள் உள்ளன.

எந்த சோஷியல் மீடியா தளத்தை ஒருவர் அதிகம் பயன்படுத்துகிறார் என்பதை வைத்தே அவரது வயதை கண்டுபிடித்துவிடலாம் என்ற நிலை வந்துவிட்டது.
சமீபத்தில் ஒன்இந்தியாதமிழ் சார்பில், "நாளைக்கே தேர்தல் என வைத்துக் கொள்வோம், உங்கள் வாக்கு யாருக்கு?" என்ற கேள்வி, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சோஷியல் மீடியா தளங்களில் முன்வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு இது தேர்தல் ஆண்டு, எனவே மக்களின் பல்ஸ் பிடித்து பார்க்க இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தோம்.
அதில் கிடைத்த ரிசல்ட் ரொம்பவே ஆச்சரியப்படுத்திவிட்டன.
இன்ஸ்டாகிராமில் முந்திய விஜய்:
"நாளைக்கே தேர்தல் என வைத்துக் கொள்வோம், உங்கள் வாக்கு யாருக்கு?" என்ற கேள்விக்கு திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 கட்சிகளின் பெயர்களை இன்ஸ்டாகிராமில் ஆப்ஷன்களாக கொடுத்திருந்ததோம்.
சுமார் 2.75 லட்சம் மக்கள், வாக்குகளை அள்ளிக் கொட்டிவிட்டனர். அதில் 77 சதவீதம் பேர், விஜய்யின், தவெகவிற்குதான் எங்கள் ஆதரவு என்று சொல்லியிருந்தனர். நாம் தமிழர் கட்சிக்கு இதில் 2வது இடம். மொத்தம் வாங்கிய ஓட்டுக்கள் 9 சதவீதம். திமுகவுக்கு 8 சதவீதமும், அதிமுகவிற்கு 6 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.
இளைஞர்கள், குறிப்பாக, Gen Z வயதினரும், காட்சி சார்ந்த (visual-first) பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள்தான் இன்ஸ்டாவில் அதிகம். அவர்கள், மத்தியில் TVK ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதை இது உணர்த்துகிறது.

பேஸ்புக் திமுகவின் கோட்டை:
மற்றொரு பிரபலமான சமூக ஊடக தளமான பேஸ்புக் வழக்கம்போல திமுக கோட்டையாக தொடர்கிறது. இந்த 4 ஆப்ஷனோடு நாம் கொடுத்த போஸ்ட் 10 லட்சம் பார்வையாளர்களை எட்டியிருந்தது.
22 ஆயிரம் பேர் கமெண்ட்ஸ் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் 2,000 கமெண்ட்களை சாம்பிளாக எடுத்தோம். 57.6 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகவும், 21.7 சதவீதம் பேர் தவெகவிற்கு ஆதரவாகவும், 18.7 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், கருத்து தெரிவித்திருந்தனர்.
நடுத்தர வயதினர் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்கிலும், அதிமுகவை, தவெக முந்துவது அரசியல் ட்ரெண்ட் எதை நோக்கி போகிறது என்பதை காட்டுகிறது.

எஸ்க் தளத்தில் திமுக பெரும் முன்னணி:
அதேநேரம், X தளத்தில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பது உறுதியாகிறது. அறிவுசார் விவாதங்கள் நடக்கும் எக்ஸ் தளம் திமுகவின் கோட்டையாக தொடர்கிறது. 4826 பயனர்களை நமது போஸ்ட் ரீச் செய்தது. 454 பேர் வாக்களித்தனர்.
அதில், திமுகவுக்கு ஆதரவு 82.2 சதவீதமாகும். தவெகவிற்கு 6.4 சதவீதம், அதிமுகவுக்கு 6.4 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 2.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இளைய சமுதாயத்தினர் மத்தியில் தவெக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதையும் கொஞ்சம் நிதானிப்பவர்கள் மத்தியில் திமுகவிற்கு ஆதரவு தொடர்வதையும் கணிக்க முடிகிறது
தவெகவிடம் அதிமுக, அட்லீஸ்ட் சமூக ஊடகங்களில், பின்தங்குவதை கவனிக்கும்போது....
நாடு எங்கே சார் போகுது?.....












Click it and Unblock the Notifications