Onion Sales: செப்டம்பர் 3 முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை- அமைச்சர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ ரூ 35-க்கு விற்பனை செய்யப்படும்.

முதல்கட்டமாக 8000 கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படும். இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு இணைய மூலம் 1000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ 50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கோயம்பேடு மார்க்கெட்டிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றத்தால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால்தான் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 37,328 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முழு நேர கடைகளும், பகுதி நேரக் கடைகளும் இயங்கி வருகின்றன. ரேஷன் கடைகளில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் என அவரவர் வைத்திருக்கும் கார்டுகளுக்கேற்ப வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுகள் 5 வகைப்படுகின்றன. அவை PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC ஆகியவை ஆகும். இதில் PHH என்பது அரிசி, பிற அத்தியாவசிய பொருட்களை பெறலாம். PHH-AAY என்பது மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதத்திற்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.
NPHH- அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பெற தகுதியுடையது. NPHH-S- அரிசி தவிர சர்க்கரை மற்றும் இதர பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். NPHH-NC- என்பது வெறும் முகவரிச் சான்றுக்காக பயன்படுத்தப்படும். எந்த பொருட்களும் வழங்கப்படாது.
TNPDS செயலி மற்றும் tnpds.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஸ்மார்ட் கார்டு விவரங்களை சரிபார்க்கலாம். முகவரி மாற்றம், புதிய உறுப்பினரை சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்றவற்றை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
One Nation One Ration Card இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்போர் இந்தியாவில் எந்த பகுதியிலும் உள்ள நியாய விலை கைகளில் கைரேகை மூலம் பொருட்களை பெறலாம். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கேழ்வரகு, சிறுதானியங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
