ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா.. ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைத்தது தமிழக அரசு
சென்னை: தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா பேரவை அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில், ஆளுநர் மாளிகைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, 'ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை' விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டார். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை
எனினும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த கடந்த 6 ஆம் தேதி மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற, தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தனது விளக்கத்தில் ஆளுநர் கூறியிருந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

சட்ட மசோதா தாக்கல்
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்ப தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று தமிழக சட்ட சபையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, அரசின் விளக்கங்கள் குறித்தும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.

மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
பின்னர் மசோதாவை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பா.ம.க.) உள்பட அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினர். சட்டமன்றத்தில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 8 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா பேரவை அலுவலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பிய நிலையில், ஆளுநர் மாளிகைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவுடன் சந்திப்பு
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நேற்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். தற்போது மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கும் இந்த மசோதா விவகாரத்தில் ஆளுநர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications