ஆன்லைன் பத்திரப்பதிவு ஓகே.. அடமான பத்திரம், ரசீதும் இதிலா? ஏன் இந்த காத்திருப்பு? அரசு சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் புதிய மாற்றங்களை தமிழக பதிவுத்துறை கொண்டு வருகிறது. ஆனால், ஆன்லைன் பத்திரங்களுக்கு 24 மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டியதால், நேரில் டோக்கன் பெற்றவர்களுக்கு தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.. அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் பத்திரப்பதிவு முழுவதையும் காகிதமில்லா மின்னணு முறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இப்படியொரு புகார் கிளம்பியிருக்கிறது.

வீடு, நிலம் வாங்கும்போது பத்திரப்பதிவு என்றாலே சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று, ஆவணங்களை கொடுத்து, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைதான் இருந்து வருகிறது.

Online Property Mortgage Registration

இதை மாற்றும் வகையில் தமிழக பதிவுத்துறை, பத்திரப்பதிவு நடைமுறையை படிப்படியாக ஆன்லைன் மற்றும் முழுமையான மின்னணு முறைக்கு கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல், வீடு, மனை தொடர்பான பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடமான பத்திரம், கடன், ரசீது ஆவணம்

அடுத்தகட்டமாக, வீட்டுக்கடன் வாங்கும்போது, வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு வழங்கப்படும் எம்.ஓ.டி. எனப்படும் அடமானப் பத்திரம், கடன் முழுவதும் செலுத்திய பிறகு வழங்கப்படும் ரசீது ஆவணம் போன்றவற்றையும் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இதனால், இந்த ஆவணங்களுக்காகவும் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.

ஆனால், ஆன்லைன் பத்திரப்பதிவில் புதிதாக ஒரு சிக்கலும் கிளம்பி உள்ளது.. அதாவது ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் பத்திரங்களுக்கு சார் பதிவாளர் 24 மணி நேரத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால், அலுவலகத்துக்கு வந்ததும் அதிகாரிகள் முதலில் ஆன்லைன் பத்திரங்களை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. அந்த பணிகள் முடிந்த பிறகுதான் நேரில் வந்து டோக்கன் பெற்றவர்களின் பத்திரப்பதிவு நடைபெறுகிறது.

ஆன்லைன் பத்திரப்பதிவு

இதுக்காகவே காலையிலேயே டோக்கன் வாங்கி காத்திருக்கும் பொதுமக்கள் மதியம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சார் பதிவாளர் ஒருவர் சொல்லும்போது, இதெல்லாம் அதிகாரிகள் வேண்டுமென்றே ஏற்படுத்தும் தாமதம் கிடையாது, பதிவுத்துறை மென்பொருளே ஆன்லைன் பத்திரங்களுக்கு முதலில் ஒப்புதல் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தவறு கிடையாது ல்லை என்றாலும், நேரில் டோக்கன் வாங்கி காத்திருக்கும் பொதுமக்களுக்கும் தாமதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காகிதமில்லா பத்திரப்பதிவு முறை

இந்த சிக்கல் ஒருபுறமிருந்தாலும், நம்முடைய பதிவுத்துறையை பொறுத்தவரை, பத்திரப்பதிவில் இன்னும் பெரிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு ஆன்லைன் சேவைகள் இருந்தாலும், பல்வேறு கட்டங்களில் காகித ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பத்திரத்தை தயாரிப்பது, சரிபார்ப்பது, பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை முழுமையாக மின்னணு முறைக்கு மாற்றி, அடுத்த வருட தொடக்கத்திற்குள் காகிதமில்லா பத்திரப்பதிவு முறையை கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது.

இதற்காக மாதிரி பத்திரப்பதிவு மையம் ஒன்றையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பத்திரங்களை மின்னணு முறையில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதால், தேவைப்படும் நேரத்தில் அவற்றை எளிதாக எடுத்துப் பார்க்க முடியும்.. காகித ஆவணங்களை பாதுகாத்து வைக்கும் சிரமமும் குறையும். மேலும் ஆன்லைன் பத்திரப்பதிவு உள்ளிட்ட சேவைகள் இன்னும் எளிமைப்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதும் இங்கு கவனம் பெற்றுள்ளது..!!!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+