Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12 நாட்களே மிச்சம்! ராகுல் காந்தி தமிழகத்தை புறக்கணிக்க காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள பிரதான கூட்டணிகள் தங்கள் வியூகங்களை மிகத் தீவிரமாக வகுத்து வருகின்றன.. குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் தமிழகத்தையே சுற்றிச் சுழன்று வருகின்றனர். இந்தச் சூழலில் தான் திமுக கூட்டணியில் ஒரு புரியாத மௌனம் நிலவி வருகிறது.. அதை பற்றின எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஜாம்பவான்கள் வாரத்திற்கு ஒருமுறை தமிழகம் வந்து வாக்குச் சேகரிப்பதோடு, மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து ஆக்ரோஷமான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Rahul Gandhi Campaign Update TN Election 2026 DMK Congress Alliance Tension Tamil Nadu Politics Viral News 2026

ஆனால், காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்படும் ராகுல் காந்தி, தமிழகப் பிரச்சாரக் களத்திற்கு வராமல் இருப்பது திமுக மேலிடத்தை நிலைகுலைய வைத்துள்ளது..

ஸ்டாலின் - ராகுல் இடைவெளி?

ராகுல் காந்திக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே ஒரு சுமூகமான நட்பு எப்போதும் இருந்து வந்துள்ளது.. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது "ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்" என்று முதலில் அறிவித்தவர் ஸ்டாலின்.. அத்தகைய நெருக்கமான உறவு இருந்தும், இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தை ராகுல் காந்தி பாராமுகமாகப் பார்க்கிறாரா அல்லது திட்டமிட்டுப் புறக்கணிக்கிறாரா? என்ற சந்தேகம் இப்போது திமுக கூட்டணிக்குள்ளேயே வலுவாக உருவாகியுள்ளது..

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முடிவடைய இன்னும் வெறும் 12 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் இதுவரை தமிழகம் பக்கம் தலை காட்டாதது திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வை ஏற்படுத்தியுள்ளது..

ராகுல் காந்தி வருவாரா

காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ராகுல் காந்தியின் வருகை மிக அவசியம் என்று ஸ்டாலின் கருதுகிறார்.. இந்த இடங்கள் பாரம்பரியமாகவே காங்கிரஸுக்குப் பலம் வாய்ந்தவை என்பதால், அங்கே ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.

அதேபோல் தமிழகத்தின் மையமான திருச்சியில் ஸ்டாலினும் ராகுலும் ஒரே மேடையில் தோன்றி கர்ஜித்தால், அது மாநிலம் முழுவதும் ஒரு மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இவ்வளவு திட்டமிட்டும் ராகுல் காந்தி இதுவரை தேதி ஒதுக்காமல் இருப்பது அறிவாலயத்திற்கு மிகப்பெரிய தலைவலியைத் தந்து வருகிறது..

மனக்கசப்புகள்

அதுமட்டுமல்ல, ராகுல் காந்தியின் இந்த ஒதுங்கியிருக்கும் மனப்பான்மை தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கசப்புகளின் வெளிப்பாடா அல்லது வேறு ஏதேனும் தேசிய அரசியல் கணக்குகளா என்பது வரும் நாட்களில் அம்பலமாகும்..

இருந்தாலும், காங்கிரஸ் தரப்பிலிருந்து வரும் தகவல்கள் வேறு விதமாக உள்ளன.. ராகுல் காந்தி தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், தற்போதைய சூழலில் வட மாநிலங்களில் நிலவும் முக்கிய அரசியல் நகர்வுகளில் அவர் கவனம் செலுத்தி வருவதால் மட்டுமே இந்தத் தாமதம் ஏற்படுவதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்களாம்..

மேலும், ராகுல் காந்தி ஒரே ஒரு முறை தமிழகம் வந்தாலும், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கடைசி சில நாட்களில் புயலாகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் சஸ்பென்ஸ்?

திமுக தலைமையைப் பொறுத்தவரை, ராகுல் காந்தியின் வருகை கூடுதல் பலமே தவிர, அதுவே வெற்றியின் தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது என்பதில் உறுதியாக உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் சாதனைத் திட்டங்கள் மற்றும் கட்சியின் வலுவான கட்டமைப்பு தங்களை எளிதாகக் கரை சேர்க்கும் என்று திமுகவினர் நம்புகின்றனர்.. எது எப்படியோ, கடைசி நேரத்தில் ராகுல் காந்தி திடீர் வருகை தந்து கூட்டணியின் 'சஸ்பென்ஸை' முடிவுக்குக் கொண்டு வருவாரா அல்லது திமுக தனது சொந்த பலத்திலேயே தேர்தலைச் சந்திக்குமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெளிவாகிவிடும்..!

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+