செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! 3 நாற்காலிகள் 7 நாற்காலிகளாக மாறியது எப்படி? மேடையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற சரவதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் முதலில் 3 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்த நிலையில் பிரதமர் வருகைக்கு பிறகு 7 நாற்காலிகளாக மாற்றப்பட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் செஸ் ஒலிம்பியாட் சேர்மன் ஆகிய மூவருக்கு மட்டுமே மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருப்பதாக முதலில் கருதப்பட்டன.

பிறகு பிரதமர் மோடி வருகைக்கு பிறகு விழா மேடையில் ஒரே நிமிடத்தில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாற்காலி குழப்பம்

நாற்காலி குழப்பம்

விழா மேடையில் முதலில் 3 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்ததால் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் தலைவரை தவிர ஆளுநர் ரவி உட்பட மற்ற முக்கியஸ்தர்கள் விஐபிக்கள் பகுதியில் அமர வைக்கப்படுவார்களோ எனப் பேசப்பட்டது. ஆனால் அது போல் எல்லாம் இல்லை. பிரதமர் விழா மேடையை நோக்கி வந்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்த 3 நாற்காலிகள் 7 நாற்காலிகளாக மாற்றப்பட்டன.

7 பேருக்கு இடம்

7 பேருக்கு இடம்

அதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் தலைவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா காரணமாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் ஏற்கனவே பனிப்போர் நிலவி வரும் சூழலில், அமைச்சர் மெய்யநாதன் அருகில் ஆளுநர் ரவிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

Recommended Video

    Chess Olympiad 2022: தமிழகத்திற்கும் சதுரங்கத்திற்கும் நீண்ட தொடர்பு உள்ளது - PM Modi
    நாளிதழ் விளம்பரங்கள்

    நாளிதழ் விளம்பரங்கள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா தொடர்பாக இந்தியா முழுவதும் வெளியாகும் முன்னணி நாளிதழ்களில் இன்று கொடுக்கப்பட்டிருந்த விளம்பரங்களில் கூட பிரதமர் மோடி பெயருக்கு அடுத்தப்படியாக தமிழக ஆளுநர் ரவி பெயர் தான் இடம்பெற்றிருந்தது. மூன்றாவது வரிசையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+