சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வு அரை மணிநேரம் மட்டுமே எழுத விட்டனர்... டாக்டர் கனவு பாழாகி விட்டது - மாணவி கண்ணீர்

உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறி தனிமைப்படுத்தி கண்காணித்ததால் அரைமணி நேரமே நீட் தேர்வு எழுதியதாக மாணவி ஒருவர் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுத சென்ற போது உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக கூறி தனிமைப்படுத்தியதால் அரைமணி நேரம் மட்டுமே தேர்வு எழுத முடிந்ததாக மாணவி ஒருவர் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அனுப்பியுள்ளார். டாக்டராக வேண்டும் என்று நினைத்தேன் மன உளைச்சலில் சரியாக தேர்வு எழுத முடியாமல் போய்விட்டதாக கூறியுள்ளார் அந்த மாணவி.

சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா. டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு கடந்த சில மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். கொரோனா அச்சத்திற்கு இடையேயும் தைரியமாக தேர்வு எழுத சேத்துப்பட்டில் உள்ள மையத்திற்கு வந்த நிவேதிதாவிற்கு சோதனை காத்திருந்தது. வெப்பப்பரிசோதனை செய்யப்பட்டபோது பீப் சவுண்ட் கேட்டதால் அதிக வெப்பம் இருப்பதாக கூறி தனிமையில் நிற்க வைக்கப்பட்டார்.

Only half an hour was allowed to write the NEET Exam student complaint National Testing Agency

நேரம் செல்லச்செல்ல நிவேதிதான் மனதில் படபடப்பு அதிகமானது. மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு 4.22 மணிக்குதான் நிவேதிதா தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். அரை மணிநேரத்தில் என்ன எழுத முடியும் தன்னுடைய மருத்துவ கனவு பாழகி விட்டதாக கூறியுள்ளார் மாணவி நிவேதிதா.

உடல் வெப்பநிலை சீராக இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தேர்வு எழுதுவதில் தாமதம் ஏற்பட்டது. 45 கேள்விகள் மட்டுமே தன்னால் எழுத முடிந்ததாக கூறியுள்ளார் நிவேதிதா. ஒராண்டாக காத்திருந்த நிலையில் தன்னுடைய மகளின் மருத்துவ கனவு பாழாகி விட்டதாக கூறியுள்ளனர் மாணவியின் பெற்றோர். பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

வயசான காலத்துல நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு பிடிச்சதை செஞ்சோம்... சேர்ந்து செஞ்சோம்

மாணவியின் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள தேர்வு முகமைக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பியுள்ளார். நீட் தேர்வு சோதனைகளே மாணவ மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நிலையில் காத்திருக்க வைத்து அரை மணிநேரம் மட்டுமே எழுத நேரம் கொடுத்து மாணவியின் மருத்துவ கனவில் மண் அள்ளிப்போட்டு விட்டனர். மருத்துவ படிப்பில் சேர இன்னும் ஓராண்டு காலம் அந்த மாணவி காத்திருக்க வேண்டும் என்பதுதான் கொடுமை. மாணவியை மறு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
A student has complained to the National Testing Agency that he was only able to write the exam for half an hour as he was isolated due to high body temperature when he went to write the exam. The student said he thought he wanted to be a doctor but could not write the exam properly due to stress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X