குழப்பம் தீர்ந்தது..எம்.இ, எம்.டெக் படிப்புகளில் சேர இனி டான்செட் போதும்.. அறிவித்தது அண்ணா பல்கலை.,
Recommended Video
சென்னை: பொறியியல் முதுநிலை படிப்புகளில் சேர ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. ஒரே நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதி எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ப்ளான், எம்.ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர, ஏற்கனவே டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் தனியாக AUCET என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது.

இதனால் மாணவர்கள் இரு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இக்குழப்பத்தை தீர்க்க ஒரே நுழைவுத்தேர்வு மட்டுமே நடத்த தமிழக உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது.
இந்நிலையில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் முதுநிலை படிப்பு சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்துவதே போதுமானது என்ற முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தரான சூரப்பா, மாணவர்கள் எம்.இ, எம்.டெக் போன்ற உயர்படிப்புகளில் சேருவதற்கு டான்செட் எனப்படும் நுழைவுத்தேர்வை மட்டுமே எழுதினால் போதும் என கூறியுள்ளார்.
டான்செட்டுக்கு மாற்றாக புதிய நுழைவுத்தேர்வு (AUCET) நடத்தும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எம்.இ, எம்.டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புபளுக்கான நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் என்றும் சூரப்பா அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications