சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த்துக்கு முன்பு இப்போது ஒரே ஒரு ஆப்ஷன்தான்.. இதை விட்டால் வேறு வழியில்லை!

வரும் தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவது ஒரே வழியாக இருக்கும் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடிகளை பிடுங்கி போட்ட அதிமுகவினர், வெறுப்பில் தேமுதிகவினர்

    சென்னை: இப்போ கடைசியாக தேமுதிகவிற்கு உள்ளது இந்த ஒரே ஒரு ஆப்ஷன்தான். இதைவிட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

    முதலில் தேமுதிக அதிமுக தருவதை வாங்கி கொள்ளும் மனநிலையில்தான் இருந்திருக்கும் போல. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே 7 தரவும் அங்குதான் ஈகோ ஆரம்பமானது. நாங்களும் அவங்களை போல கெத்துதான் என்று பேரம் பேச ஆரம்பிக்கவும் அதிமுகவின் விலகல் அதிகமானது.

    பாஜகவின் ஒரே முயற்சியால் இப்போது திரும்பவும் 4 சீட் தர முன்வந்தது. இல்லையென்றால் இந்த 4 சீட்டையும் தர அதிமுக மனசார சம்மதிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் வெறும் 4 என்பதை பார்த்து ஆடிப்போன தேமுதிக, திமுகவுடனும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. ஆனால் ஒரே நாளில் எல்லாம் வெட்ட வெளிச்சமும் ஆனது.

     கொடிகளை பிடுங்கி போட்ட அதிமுகவினர்.. 4 கிடைத்த வெறுப்பில் தேமுதிகவினர்.. ஒர்க் அவுட் ஆகுமா? கொடிகளை பிடுங்கி போட்ட அதிமுகவினர்.. 4 கிடைத்த வெறுப்பில் தேமுதிகவினர்.. ஒர்க் அவுட் ஆகுமா?

    படங்கள்

    படங்கள்

    எப்போது கூட்டணி வைத்து கொள்வதாக கூறிக் கொண்டே இன்னொரு கட்சியுடன் பேச்சுவார்த்தையில் தேமுதிக இறங்கிவிட்டதோ அப்போதே அதிமுகவுக்கு இந்த கட்சியின் மீது இருந்த கொஞ்ச நஞ்சம் இருந்த மரியாதையும் போய்விட்டது. முதல்வேலையாக விழா மேடையிலிருந்து விஜயகாந்த் படங்கள், கொடிகள் அகற்றப்பட்டன.

    அவமானம்

    அவமானம்

    ஆனால் சுதீஷோ அதிமுக-பாஜகவுடனான பேச்சுவார்த்தை தொடரும் என்கிறார் என்றால், எந்த தைரியத்தில் அப்படி சொல்கிறார் என தெரியவில்லை. இத்தனை முறை கட்சி தலைவரின் படத்தை அகற்றுவதும், வைப்பதுமாக இருப்பது தேமுதிகவுக்கு பெரிய அவமானம் இல்லையா? பிரதமர் வரும் நாளில் இத்தனை அமர்க்களமும் நடக்கிறது என்றால் அது அதிமுகவுக்கு கூட்டணியில் அசிங்கம் இல்லையா?

    கெட்ட பெயர்

    கெட்ட பெயர்

    அதேபோல, வீடு தேடி வந்து பேசிவிட்டு போனார் முக ஸ்டாலின். இதைதவிர வேறு பல நேரங்களில் கூட்டணி சமாச்சாரம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இன்று கட்சி நிர்வாகிகளை விட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் அதை திமுக ஏற்குமா? அப்படியே போனால் அது திமுகவுக்கும் சேர்த்து கெட்ட பெயரை உருவாக்கி தந்திடும்.

    ஒரே வழி

    ஒரே வழி

    ஆக மொத்தம், அதிமுக, திமுக என இருதரப்பிலுமே சுதீஷ் பெயர்தான் அடிபடுகிறது. கட்சி தலைவருக்கு தெரிந்து, உடன்பட்டு இதெல்லாம் நடக்கிறதா என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் விஜயகாந்த் கட்டி காப்பாற்றிய கட்சி இது. மிகச்சிறந்த மனித நேயமிக்கவர் அவர். சிறந்த உழைப்பாளி. அவரால் இன்று ஒரு பேச்சுவார்த்தையில் கூட கலந்து கொள்ள முடியமல் இருப்பதை கண்டு தமிழக மக்கள் உளமார வருந்துகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே வழி.. நம்பி இருக்கும் தொண்டர்களை விட்டுவிடாமல் இருக்கவும் சிறந்த வழி.. விஜயகாந்த் தனித்து நிற்பதுதான்!

    English summary
    DMDK can contest in all 40 seats without alliance in MP Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X