வச்சாங்க ஆப்பு.. 2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே சரக்கு கிடைக்கும்: தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?
சென்னை: இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது கொடுக்கப்படும் என்று தமிழ்நாட்டில் ஒரு மாநிலத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வேக்சின் போடும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வேக்சின் வரத்து அதிகம் ஆகியுள்ளதால் மக்களுக்கும் துரிதமாக வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 3,34,78,851 பேருக்கு வேக்சின் கொடுக்கப்பட்டுள்ளது.
2,68,02,610 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 66,76,241 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வேக்சின் போடுவதற்கான அவசியம் அதிகம் ஆகியுள்ளது .

நீலகிரி
தமிழ்நாட்டில் அதிகம் வேக்சின் போடப்பட்ட மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்றாகும். நீலகிரி மாவட்டத்தில் 97% பேர் தடுப்பு ஊசி செலுத்தி உள்ள நிலையில் மீதமுள்ள மூன்று சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் 5,75,510 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

நீலகிரி மக்கள் தொகை
நீலகிரியின் மக்கள் தொகை 7.5 லட்சம் ஆகும். இதில் அதிகபட்சம் 1 லட்சம் பேர் வரை மட்டுமே வேக்சின் போட தகுதியானவர்கள். இதனால் இன்னும் 1 லட்சம் பேர் வரை அங்கு வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு டோஸ் கொரோனா வேக்சின் செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக்கில் மது கொடுக்கப்படும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மது
நீலகிரியில் டாஸ்மாக் கடைகள் திறந்து உள்ளன. அங்கு வெளியூர் மக்கள் சுற்றுலாவும் வர தொடங்கி உள்ளனர். நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் மது அருந்துபவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்த அச்சம் தெரிவித்து வருகிறார்கள். வேக்சின் போட்டால் மது குடிக்க முடியாதோ என்ற அச்சம் காரணமாக இதை தவிர்த்து வருகிறார்கள்,
Recommended Video

மாவட்டம்
இந்த நிலையில்தான் மது அருந்துபவர்களை வேக்சின் போட வைக்கும் விதமாக இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் குறுந்தகவலை காண்பித்தால் மட்டுமே அவர்களுக்கு மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நீலகிரியில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு முதல் மாவட்டமாக நீலகிரி திகழும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications