போதும் தல.. நீ கிளம்பு.. இதுக்கும் மேல முட்டு கொடுக்க முடியல.. முரட்டு தோனி பக்தனின் முனகல் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2004ல நீங்க இந்திய ஒன்டே டீம்ல சேர்ந்ததுல இருந்து உன்னோட ஒவ்வொரு மேட்சையும் பார்த்து, ரசிச்ச உரிமையில இந்த ஓப்பன் லெட்டர உனக்கு எழுதுறேன் தல தோனி.

கண்டவனெல்லாம் உன்னை கழுவி ஊத்த ஆரம்பிச்சிருக்கலாம்.. ஆனா நட்பு சுட்டுதலோட நாலு வார்த்தை நறுக்குன்னு கேக்க எனக்கு உரிமை இருக்குன்னு நம்பி எழுதுறேன்.

ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் பெவன், தென் ஆப்பிரிக்காவுக்கு க்ளூசினர், பாகிஸ்தானுக்கு அப்துல் ரசாக், குட்டி நாடு இலங்கைக்கு கூட ரசல் அர்னால்டு பினிஷரா வாய்ச்சப்போ, நமக்கு மட்டும் ஏன், நயன் மோங்கியான்னு, நட்ட நடு ராத்திரி கூட எந்திரிச்சி யோசிச்ச காலம் உண்டு.

 சச்சின் அவுட்

சச்சின் அவுட்

சச்சின் அவுட்டானா டிவியை ஆப் செஞ்ச தலைமுறையிலிருந்து வந்தவன் நான். மோங்கியாவோட மொத்த டீமும் குளோஸ்தானே. அதுக்கு பிறகு இறங்குற பிளேயர் பவுலர் வீசுற பந்தை பார்த்தாலே, பாக்சிங்கை பார்த்த 'கபிலனோட அம்மா' மாதிரி குய்யோ முறையோன்னு ஓட்டம் பிடிச்சிருவாங்க. மத்த டீமுக்கெல்லாம் 10 விக்கெட், நம்ம டீமுக்கு மட்டும் 6 விக்கெட் போனா அத்தனையும் ஓவர்.

ராபின் சிங், யுவராஜ் சிங்

ராபின் சிங், யுவராஜ் சிங்

ஏழைகளின் ஆப்பிள் பேரிக்கான்னு சொன்ன மாதிரி, நமக்கு ஒரு பினிஷரா வந்தவருதான் ராபின் சிங். ஆனா, அவரும், ஆப் சைடுல பந்து போனா சிங்கிள்தான் அடிப்பார். யுவராஜ் சிங் வந்த பின்னாடிதான், 7 விக்கெட் விழுர வரையாவது மேட்ச் பாக்குற தெம்பு வந்துச்சு. ஆனா நீ வந்த பிறகுதான தலைவா.. 9 விக்கெட் போனாலும், ஆப்போசிட் டீம் முகத்துல மரண பயத்த பார்க்க முடிஞ்சது!

பந்து படமாட்டேங்குதே

பந்து படமாட்டேங்குதே

சிஎஸ்கே கேப்டனா நீ வந்ததும், கப்பு உனக்குதான்னு எழுதிவச்சிட்டு பல அணி கேப்டனும் பிளைட் ஏறி ஓடியதா உளவுத்துறை தகவல் உண்டு. முதல் மேட்சே பைனல், அடுத்த மேட்ச்சே, கப்புன்னு, நீயும் கதற வச்சிட்டு இருந்த. இத்தனைக்கும் காரணம் உன்னோட கேப்டன்ஷி மட்டுமில்ல, புயல் வேகத்துல வர்ற பேட்டுதான். இப்பவும் பேட் என்னவோ வேகமாதான் வருது. ஆனா பந்து படமாட்டேங்குதே தல.

கொம்பன் யானை கோவிலில்

கொம்பன் யானை கோவிலில்

கொம்பன் காட்டு யானையை, கோயில்ல கட்டி போட்ட மாதிரி இருக்கு தல இப்போல்லாம் உன்னை பார்த்தா. நீ கிரிக்கெட் விளையாட வந்த பிறகு பிறந்த சின்ன பையன்லாம் உன்னை பௌல்ட் ஆக்கும்போது, தில்லானா மோகனாம்பாள் படத்துல கத்தி பாய்ஞ்சதும் கதறி துடிக்கிற சண்முக சுந்தரம் மாதிரி, மனசு சும்மா படபடன்னு அடிச்சிக்குது.

என்ன தல இது நியாயமா

என்ன தல இது நியாயமா

முன்னல்லாம் யார்க்கர் போட்டா சிக்ஸ், ஷாட் பிட்ச் போட்டா ஃபுல், ஆப் சைடு போட்டா அப்பர் கட்டுன்னு ஆப்போசிட்ட கதற வச்ச.. இப்போ ஃபுல்டாசே போட்டாலும், டாட் பாலா மாத்திவிட்டு, பார்க்குற எங்களைத்தான கதற வைக்குற, "என்ன தல இது நியாயமா" நீயே சொல்லு. முன்னல்லாம் நீ களத்துல நின்னா எதிரணி ரசிகர்லாம் கையெடுத்து கடவுளை கும்பிட்டு வேண்டிப்பாங்க. இப்போல்லாம், நாங்கதான் வேண்டிக்கிறோம் தல. நீ களத்துக்கே வரக்கூடாது. அடிக்க முடியாம அவஸ்தை படுறத பார்க்க கூடாதுன்னு.

படையப்பா ரஜினி இல்ல தல

படையப்பா ரஜினி இல்ல தல

ஆனா.. இன்னும் எத்தனை நாளைக்குதான் நீ விளையாடலாம்னு நினைச்சிட்டு இருக்க. ஏன்னா இப்பவே சொல்லிட்டா, ரிட்டையர்ட் ஆகுற வரைக்கும் டிவி ரிமோட்டையே எடுக்க வேண்டாம்ல அதான். நீ ஒன்னும் படையப்பா படத்துல வர்ற ரஜினி இல்ல தல. வயசான பிறகும் வம்படியா சட்டையை கழற்றிட்டு சண்டை போடுறதுக்கு.. இது கிரிக்கெட்.

கில்கிறிஸ்ட் ஞாபகம் இருக்கா

கில்கிறிஸ்ட் ஞாபகம் இருக்கா

உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா தல. ஓய்வுக்கு ஒரு வருஷம் இருக்குன்னு சொல்லிட்டு இருந்தாரு கில்கிறிஸ்ட். ஆனா, அதுக்கெல்லாம் தேவையே இல்லைங்கிற மாதிரிதான் அவர் வழக்கம்போல பந்துகளை பந்தாடிகிட்டு இருந்தாரு. ஒரே ஒரு கேட்ச்.. அவ்ளோதான் மொத்த கெரியரையும் முடிச்சிகிட்டாரு. "அடிலைடு டெஸ்ட்ல லட்சுமண் பேட்ல பட்டு வந்த பந்தை கேட்ச் பிடிக்காம விட்டுட்டேன். அப்போதான் இனி கிரிக்கெட்ல ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்னு" சொல்லிட்டு உடனே ஓய்வை அறிவிச்சாரு. நானும்தான், இந்திய கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவிச்சிட்டேனேன்னு நீயும் பதிலுக்கு சொல்லுவ. ஆனா ஐபிஎல் மட்டும் எதுக்கு? வாழ்ந்து கெட்ட ஜமீனை பார்க்குற மாதிரி இருக்கு தல நீ பேட்டிங் செய்யுறத பார்க்குறதுக்கு. 2கே கிட்ஸெல்லாம் இந்த பேட்டிங்கை பார்த்துட்டு இதுதான் தோனின்னு மனசுல பதிய வச்சிட்டு இருக்காங்க. இல்லப்பா.. வின்டேஜ் தோனிய பார்த்துருக்கீங்களான்னு ஒவ்வொரு மேட்சுக்கு அப்புறமும் உன் பழைய காலத்து போட்டி வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து முட்டு கொடுக்க நாங்க படுற பாடு எங்களுக்குதான் தெரியும். அந்த வலி இருக்கே.. வலி..

Recommended Video

    IPL 2022-விலும் CSK-ல தான் இருப்பேன்.. ஆனால்.. Dhoni சூசகம்
    கிளம்பு தல

    கிளம்பு தல

    சச்சினும், லாராவும் இப்போ கூட பழைய டச்ல ஆடுறாங்க. ஆனா நீ மட்டும் ஏன் தல, வாங்குன பேரையெல்லாம் வட்டியும் முதலுமா கரைச்சிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்க. கிளம்பு தல. இதுக்கு மேல எடுத்து போட எங்ககிட்ட பழைய வீடியோல்லாம் இல்ல. மெமரி கார்டு முடிஞ்சி போச்சி நீ கிளம்பு தல. அடுத்த வருஷமும் ஆடுவேன்னு அடம் பிடிக்காம இதே சீசனோட நீ கிளம்பு தல. பிசிசிஐ உன்னை மென்டரா போட்டாச்சு. இதை விட கவுரவம் வேறு என்ன உனக்கு தேவை. இன்னும் நீ பேட்டிங்க இப்படியே பண்ணிட்டிருந்தா, இவரு மென்டரா இருந்தா அடிச்சி ஆடுறவனும், அவரு பேச்சை கேட்டுட்டு டெஸ்ட் ஆட ஆரம்பிச்சிருவான்னு என் காதுபடவே எதிரணிக்காரன் பேசுறத இனியும் பொறுக்க முடியாது தல. சொல்றத சொல்லிட்டேன்.. அப்புறமும் ஆடுவேன்னு ஆட்டம் காட்டுனன்னா, என் தலைக்கு தில்ல பார்த்தியா.. 20 ஓவர் மேட்ச்லயும் டெஸ்ட் ஆடுற ஒரே ஆளு இந்த உலகத்துலயே நீதான்னு அதுக்கும் முட்டு கொடுக்குறத தவிர எனக்கு வேறு வழி தெரியல. இப்படிக்கு உன் முரட்டு பக்தன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+