Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபரேஷன் 15".. தமிழ்நாட்டிற்கு படையெடுத்த 76 பாஜக தலைகள்.. சுடசுட ரெடியான ரிப்போர்ட்.. அப்போ திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசியல் நிலவரம் தொடர்பாக சில முக்கியமான ரிப்போர்ட்களை அவர்கள் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தென் மாநிலங்களில் வெற்றிபெற வேண்டும் என்பது பாஜகவின் மிகப்பெரிய குறியாக உள்ளது. தெலுங்கானாவில் வேகமாக காய் நகர்த்தி வரும் பாஜக தற்போது தமிழ்நாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதை பயன்படுத்தி பாஜக தன்னை இரண்டாவது பெரிய கட்சியாக முன்னிறுத்த பார்க்கிறது. முக்கியயமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு பாஜக தன்னை முன்னிறுத்த தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் பாஜக தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024க்காக போட்டிருக்கும் சில திட்டங்கள் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்து உள்ளன.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அமைச்சர்கள் படையெடுத்து வருகிறார்கள். அதன்படி அடுத்த 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு வர உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் ஆய்வு செய்யவும், மத்திய அரசின் நலத் திட்டம் மக்களுக்கு செல்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காகவும் அவர்கள் தமிழ்நாடு வருவதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் வரை வருகை புரிந்து உள்ளனர்.

 அமைச்சர்கள் வருகை

அமைச்சர்கள் வருகை

தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகத்தில் வழங்கப்படும் ரேசன் அரிசி தரம் குறித்து கடுமையாக விமர்சித்தார். குடும்ப அரசியலை அனுமதிக்க கூடாது. பாஜக குடும்ப அரசியல் செய்யும் கட்சி இல்லை என்றும் குடும்ப அரசியல் செய்யும் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்றார். அதேபோல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா , மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணு ஆற்றல் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் என்று வரிசையாக பல்வேறு அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வருகை புரிந்து வருகின்றனர்.

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இவர்களுக்கு முக்கியமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழ்நாட்டில் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது, அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது, மக்கள் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன, மக்களின் தேவைகள் என்னென்ன, என்ன மாதிரியான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் எடுபடும் என்பது தொடர்பாக இவர்கள் ரிப்போர்ட் அனுப்பி வேண்டும். அதேபோல் பூத் வாரியாக பாஜகவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இவர்கள் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, அதற்கான ரிப்போர்ட்டை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

குறி என்ன?

குறி என்ன?

இவர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாடு டிரிப் முடித்த பின் அதை பற்றிய ரிப்போர்ட்டை தயார் செய்வார்கள். அந்த ரிப்போர்ட்டை பின்னர் அவர்கள் டெல்லிக்கு அனுப்புவார்கள். இப்படி 76 அமைச்சர்கள் ரிப்போர்ட் அனுப்பிய பின் அதை வைத்து ஒரு மெகா ரிப்போர்ட் உருவாக்கப்பட உள்ளது. அதை வைத்து தமிழ்நாட்டிற்கான தேர்தல் 2024 பிளானிங் உருவாக்கப்படும் என்று பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டில் லோக்சபா இடங்களில் 15ஐ வெல்ல பாஜக திட்டமிட்டு வருகிறது.

பிளானிங்

பிளானிங்

இதற்காக பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு திமுக எப்படி பதிலடி கொடுக்கும் என்பதே தற்போது கேள்வியாக உள்ளது. 2024 தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாஜக ஏற்கனவே மறைமுகமாக தொடங்கிவிட்டது. இந்த நிலையில் திமுக சார்பாக மாநிலம் முழுக்க எம்பிக்கள் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எம்பிக்கள் நேரடியாக களத்திற்கு சென்று மக்களை சந்திப்பார்கள், அவர்களின் குறைகளை கேட்பார்கள் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+