"அமித் ஷாவையே கைது செய்தவர்".. டிஜிபி கந்தசாமி - முதல்வர் மீட்டிங்.. பேசியது என்ன? ஆபரேஷன் AAA!
சென்னை: மிகவும் ஸ்டிரிக்ட் அதிகாரி என்று பெயர் பெற்ற டிஜிபி கந்தசாமியுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீட்டிங் நடத்தியது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக கடந்த மாதம் ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே அவர் மீதான கவனம் அதிகம் இருந்தது. இவ்வளவு ஸ்டிரிக்ட் அதிகாரியை, முக்கியமான துறைக்கு கொண்டு வந்தது ஏன் என்ற கேள்விகள் நிலவி வந்தன.
முக்கியமாக இவர் குஜராத்தில் 2010ல் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சோரபுதின் என்கவுண்டர் வழக்கில் கைது செய்தார். அமித் ஷாவை விசாரித்த டீமின் தலைவர் இவர்தான்.

எப்படி
எந்த அதிகாரத்திற்கும் அஞ்சாத, அரசியல் தலைவர்களுக்கு வளைந்து கொடுக்காத கந்தசாமி மீது அப்போதே பலரின் கவனம் இருந்தது. நேர்மையானவர்.. ஆளும் கட்சிக்கே அடங்கி செல்ல மாட்டார்.. ஊழல் புகார்கள், லஞ்ச புகார்கள் மீது ஸ்டிரிக்ட் நடவடிக்கை எடுக்க கூடியவர் என்ற பெயரும் டிபார்ட்மெண்டில் இவருக்கு உண்டு. இவர்தான் தற்போது தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக உள்ளார்.

டிஜிபி
நேற்று கந்தசாமியும் முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் சந்திப்பு நடத்தினார்கள். முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நடத்தப்பட்ட மீட்டிங் இது, பழைய முறைகேடுகள் எல்லாம் தூசி தட்டப்படுகின்றன என்று ஏற்கனவே நிறைய செய்திகள், கட்டுரைகள் இந்த மீட்டிங் தொடர்பாக வந்துவிட்டன. இந்த நிலையில்தான் இந்த மீட்டிங் தொடர்பான முக்கியமான புது தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஆபரேஷன்
அதன்படி ஆபரேஷன் AAA என்ற திட்டத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நடக்க போகும் கைதுகள்தான் இந்த ஆபரேஷன் என்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாய போகிறதாம். இந்த ஆகஸ்ட் மாத ஆபரேஷனைதான் AAA என்று அழைக்கின்றனர்.

சந்திப்பு
நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் டிஜிபி கந்தசாமி இடையே நடந்த மீட்டிங்கும் கூட இந்த ஆபரேஷன் AAAவை மையமாக வைத்து நடத்தப்பட்டதுதான் என்கிறார்கள். ஆபரேஷன் AAAவிற்கு அனுமதி வாங்கும் விதமாக இந்த மீட்டிங் நடந்ததாகவும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரிகள்
முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே பல செய்திகள் வந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் முடிவில் அரசு இருப்பதாக தெரிகிறது. அமைச்சர்கள் மட்டும் இல்லை சில எக்ஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள். முன்னாள் அரசுக்கு நெருக்கமாக இருந்து, முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை பாய போகிறது என்கிறார்கள்.

AAA
முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆகஸ்ட் மாதம் என்பதை குறிக்கும் வகையில்தான் ஆபரேஷன் "AAA" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். நேற்று நடந்த மீட்டிங்கில் இதை பற்றி மட்டும் பேசாமல், இந்த ஆபரேஷனை நடத்துவதற்கு தனி டீம் உருவாக்குவது குறித்தும், நேர்மையான அதிகாரிகளை அந்த டீமில் இறக்குவது குறித்தும் பேசியதாக தெரிகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications