7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. கோவையை குலுக்கிய "ஆபரேஷன் பாகுபலி".. திடீர் நிறுத்தம்.. என்னாச்சு?
சென்னை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஆபரேஷன் பாகுபலி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒற்றை காட்டு யானையான பாகுபலி கடந்த ஒரு வாரமாக அட்டகாசம் காட்டி வருகிறது. காட்டில் இருந்து ஊருக்குள் அடிக்கடி வந்து, விளைநிலங்களை சேதம் செய்வது, மக்களை விரட்டுவது என்று பாகுபலி யானை மேட்டுப்பாளையத்தை மிரள வைத்துக் கொண்டு இருக்கிறது.
எப்போது எங்கிருந்து வரும், எப்போது எங்கே பதுங்கும், எப்போது தாக்கும் என்று தெரியாத அளவிற்கு பாகுபலி யானை மிகவும் புத்திசாலித்தனமாக போக்கு காட்டி வருகிறது. இந்த யானையை பிடிக்க கடந்த ஒரு வாரமாக வனத்துறை அதிகாரிகள் போராடி வருகிறார்கள்.

உணவு
பலா பழத்தில் மயக்க மருந்து கொடுத்து அதை பிடித்து, பின் பயிற்சி கொடுக்கலாம், அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தலாம் என்ற திட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் உள்ளனர். மேட்டுப்பாளையம் பகுதிகளில் அட்டகாசம் செய்து வரும் பாகுபலி யானையை பிடிக்க டாப்சிலிப்பிலிருந்து கலீம், மாரியப்பன், வெங்கடேஷ் என்ற 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது. இந்த யானைகள் தற்போது மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிளான் என்ன
கும்கி யானைகள் உதவியுடன் பாகுபலியினை பிடித்து அதன் தலையில் ஜிபிஎஸ் ரேடியோ காலர் பொருத்தி நடவடிக்கையை கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் ஒரு வனவர், 5 வனக்காவலர்கள் அடங்கிய 7 தனிக்குழுக்கள் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட ஸ்பெஷல் மருத்துவக்குழுவினரும் அமைக்கப்பட்டனர்.

ஏன்
யானையை பிடித்த உடன் அதை சரியாக கையாள இந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. 6 வது நாளாக இன்றும் பாகுபலியினை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த யானை மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டது. எங்கே, எப்போது செல்லும் என்று சொல்ல முடியாத அளவிற்கு இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தது.

மாற்றம்
மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகங்களில் அடிக்கடி தனது இடத்தை பாகுபலி மாற்றிக்கொண்டிருப்பதால் யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து பாகுபலி ஆபரேஷன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். யானை தொடர்ந்து போக்கு காட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கும்கி யானையை இறக்கியும் கூட இந்த யானையை பிடிக்க முடியவில்லை.

யானை
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் , பாகுபலி யானை கடந்த 5 நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. நேற்று வேடர் காலனி அருகில் வந்தது குறித்து அறிந்து அங்கு சென்று சோதனை செய்தோம். ஆனால் யானை வன எல்லையை விட்டு வெளியில் வரவில்லை. இந்த நிலையில் 2 வது நாளாக இன்றும் மருத்துவக்குழுவினர் மற்றும் வனக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நடமாட்டம்
மனிதர்களுடைய நடமாட்டத்தை அறிந்து கொண்டு சிறுமுகை வனப்பகுதிக்குள் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு யானை தப்பித்து வருகிறது. யானை தொடர்ந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறது. இப்போது அதை பிடிப்பது சரியாக இருக்காது. பாகுபலியினை மேலும் துன்பப்படுத்தாமல் இருப்பதற்காக அடுத்த 10 நாட்களுக்கு தீவிர கண்காணிப்பு மட்டுமே செய்யப்படும். அதன் பின்னர் ஆபரேஷன் மீண்டும் தொடரும். இந்த 10 நாட்களும் கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கிலேயே நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications