ஆப்பரேஷன் சக்சஸ்.. எச்.ராஜா போட்ட அதிரடி ட்வீட்.. அப்புறம்தான் வெளியானது அந்த முக்கிய தகவல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சென்னை: ஆப்பரேஷன் சக்சஸ் என ட்வீட் போட்டு, நெல்லை கண்ணன் கைதான விவகாரத்தை முதலில் பிரேக் செய்துள்ளார், பாஜக தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா.

    பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றிய நெல்லை கண்ணன் பேச்சுக்கு, இரண்டில் ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்று கடந்த சில தினங்களாக தொடர்ந்து டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த அதே எச்.ராஜாதான்.

    Operation success, as Nelai Kannan has been arrested: H.Raja

    மெரினாவில் இன்று, ராஜா தலைமையில்தான், பாஜக மூத்த தலைவர்கள், தர்ணா நடத்தி, நெல்லை கண்ணன் கைதுக்கு வலியுறுத்தினர். இந்த நிலையில், இன்று இரவு சுமார் 9 மணியளவில், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தகவல் ஊடகங்களுக்கு கிடைத்தது. அதற்கு அரை மணி நேரம் முன்பாகவே, எச்.ராஜா வெளியிட்ட ஒரு ட்வீட், நெட்டிசன்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


    ஆப்பரேஷன் சக்சஸ்! இப்படி இரு வார்த்தைகளில், ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பது பற்றி நெட்டிசன்களிடையே பெரும் விவாதமே நடந்தது. மெரினா போராட்டம் நல்லபடியாக நடந்தது என்பதை இப்படி சொல்கிறார் போல என பல நெட்டிசன்கள் கூறியிருந்தனர். ஆனால், அப்புறம்தான் தெரிந்தது, நெல்லை கண்ணன் கைதான தகவலைத்தான் ராஜா இப்படி சூசகமாக சொல்லியிருக்கிறார் என்பது.

    இதன்பிறகு, சில ட்வீட்டுகளை எச்.ராஜா வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில்,


    நன்றி! நன்றி! நன்றி!

    பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களையும் கொலை செய்யத் தூண்டும் வகையில் SDPI நடத்திய கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் புகார்

    கொடுத்த பாஜக நிர்வாகிகள், இந்து இயக்க சகோதரர்கள் ...

    மேலும் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட தாமரை சொந்தங்கள், இந்து இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்களை உவகையோடு உரித்தாக்குகிறேன்

    தேசமும், தமிழகமும் காக்க நம் தர்ம போராட்டம் தொடரும்! பாரத் மாதா கீ ஜெய்!

    இவ்வாறு எச்.ராஜா கூறியிருந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+