சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குரங்கு கையில் கிடைத்த பூமாலை! வந்ததே கோபம்! திமுக அரசு மீது பாய்ந்த எடப்பாடி பழனிசாமி!

Google Oneindia Tamil News

சென்னை: குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போல் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடக்கும் நிலையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த காட்டமான பதிவில் கூறியிருப்பதாவது;

பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர்களே உஷார் பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர்களே உஷார்

குரங்கு கையில்

குரங்கு கையில்

குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். குரங்கு, பூமாலையை புழுதியில் பிய்த்து எறியும்; கொள்ளிக்கட்டையால் தன் தலையையும் சொரியும், ஊரையும் எரிக்கும். அந்த குரங்கின் நிலையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, அல்லலுறும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக வரிகளை விதித்துள்ளார்கள்.

அம்மா அரசு

அம்மா அரசு

அம்மா அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தல் மற்றும் தங்களின் ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக உரிமைத் தொகையினை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து வரை எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாத இந்த விடியா திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியது. தொடர்ந்து இப்போது மின் கட்டணத்தையும் வானளவு உயர்த்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள்

கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப் போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் C. விஜயபாஸ்கர், M.L.A., ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ற முறையில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

ஏற்கெனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது. முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள் மீது இந்த விடியா திமுக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

ஒருசில சுயநல சக்திகளோடு இணைந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா திமுக அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடுபொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா திமுக அரசு, மீண்டும் குறுக்கு வழியில் ஏவல் துறையின் உதவியோடு, கொங்கு மண்டல செயல்வீரர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களுடைய வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், கொரோனா காலத்தில் திறம்பட செயல்புரிந்து பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்ற டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்களை முடக்கும் விதமாகவும், இன்று (13.9.2022) மூன்றாவது முறையாக தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
Edappadi Palaniswami has criticized the Dravidian model rulers as acting against the welfare of the people of Tamil Nadu and strangling the throats of the opposition parties like a flower in the hand of a monkey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X