மைக்கை ஆஃப் செய்து எடப்பாடியை நோஸ் கட் செய்த சபாநாயகர்! கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள்!
சென்னை: சட்டசபையில் கூச்சலிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மைக்கை ஆஃப் செய்து அவரை நோஸ்கட் செய்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.
கேள்வி நேரத்தின் போது குறுக்கீடு செய்யாதீர்கள் என ஒரு முறை அல்ல பலமுறை கிளிப்பிள்ளைக்கு எடுத்துச் சொல்வது போல் சொல்லியும் அதனை எடப்பாடி பழனிசாமி காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
தாம் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது போல் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை தொடர்பாகவே அவர் மீண்டும் மீண்டும் பெருங்குரல் எடுத்து பிடிவாதம் பிடித்து வந்தார்.

கேள்வி நேரம்
சட்டசபை தொடங்கியவுடன் கேள்வி நேரம் ஆரம்பமானது. அமைச்சர் துரைமுருகன் எழுந்து பதில் அளிக்கத் தொடங்கியது தான் தாமதம், அதிமுக உறுப்பினர்கள் அவரை பதிலளிக்க விடாமல் கூச்சல் எழுப்பினர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி அமர வைக்கலாம் எடப்பாடி பழனிசாமி எகிறினார். அவரிடம் முடிந்தவரை சமாதானம் பேசி பார்த்த சபாநாயகர் அப்பாவு ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து டென்ஷன் ஆனார்.

மைக் ஆஃப்
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் மைக்கை பிடித்துக் கொண்டு கத்தினர். இதனால் கடும் கோபத்திற்குள்ளான சபாநாயகர் அவையின் மாண்பை கெடுப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் மைக்கை ஆஃப் செய்துவிட்டார். இதனால் கத்தி கத்தி டயர்டு ஆன அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிடும் வண்ணம் அவையின் மையப்பகுதிக்கு வரத் தொடங்கினர்.

நோஸ் கட்
அசாதாரணமான சூழல் நிலவுவதை அறிந்துகொண்ட அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தனது பங்குக்கு அவரும் எழுந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் யார் சமாதானத்தையும் ஏற்கும் மனநிலையில் இல்லாத அவர் தொடர்ந்து இருக்கை விவகாரத்தை பெரிது படுத்தினார். ஏற்கனவே மைக் ஆஃப் செய்து நோஸ்கட் செய்த சபாநாயகர் அப்பாவு இந்த முறை இருந்தால் இருக்கலாம் வெளியே செல்ல வேண்டும் என்றால் செல்லலாம் எனக் கூறி மேலும் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

சாதுர்யமாக எதிர்கொண்டார்
சபாநாயகர் மட்டும் மைக்கை ஆஃப் செய்யவில்லை என்றால் இன்று அவை நடந்திருப்பதே கடினமாகி இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையம் என முக்கியமான இரண்டு ஆணையங்கள் அளித்த அறிக்கைகளை சட்டசபையில் வைக்க முடியாமல் போயிருக்கும். இதனால் தான் குடைச்சல் கொடுத்து வந்த அதிமுக உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்றி சபையை சுமூகமாக நடத்தி வருகிறார் சபாநாயகர் அப்பாவு.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications