தை முடிவதற்குள்.. இன்னும் 2 நாட்களில் சென்னையில் நடக்கும் சந்திப்பு.. ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை முடிவதற்குள் முடிவு எடுத்து அரிவிப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இன்னும் 2 நாட்ஜ்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறிய ஓபிஎஸ், அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் எனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். ஆனால் ஓபிஎஸ் மட்டும் இன்னும் என்டிஏ கூட்டணியில் சேர்க்கப்படவில்லை.

ஓபிஎஸ் உடன் இதுவரை பாஜகவின் எந்தத் தலைவர்களும் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த ஓபிஎஸ், புதியக் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதன்பின் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுக மற்றும் தவெக வசம் சென்றனர்.
மருது அழகுராஜ், சுப்புரத்தினம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். ஜேசிடி பிரபாகரன் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே திமுக பக்கம் ஓபிஎஸ் செல்லவுள்ளதாக சில விவாதங்கள் நடந்து வருகிறது. அதேபோல் விஜய்யுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டையன் மூலமாக ஓபிஎஸ் தரப்பை தங்கள் பக்கம் கொண்டு வர விஜய் காய் நகர்த்தி வருகிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸை கூட்டணிக்குள் கொண்டு வர இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்ல.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications