திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நாவடக்கம் தேவை -ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்
சென்னை: எம்.ஜி.ஆரை துரோகி என குறிப்பிட்டதற்காக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனுக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துரைமுருகனுக்கு நாவடக்கம் தேவை என்றும் தன்னை வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆரையே துரோகி என்று கூறுவதா எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வினவியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கமேயில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.ஜி.ஆரை நோக்கி துரோகி என்று கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம் என அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

சாடல்
துரைமுருகன் தான் கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு பேசுகிறாரா அல்லது மறைத்துவிட்டு பேசுகிறாரா எனத் தெரியவில்லை என்றும் எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி தான் நம்பிக்கை துரோகி என்றும் சாடியுள்ளனர். மேலும், காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கை சத்தம் போடாமல் திரும்பபெற்றது தமிழக மக்களுக்கு கருணாநிதி செய்த மிகப்பெரிய துரோகம் எனத் தெரிவித்துள்ளார்கள்.

துரோகம்
எண்ணற்ற துரோகங்களை செய்தவர் தான் கருணாநிதி என்றும் அவர் மறைந்ததை அடுத்து அந்தப் பணியை துரைமுருகன் எடுத்துக் கொண்டிருக்கிறார் போலும் என அவர்கள் இருவரும் விமர்சித்துள்ளார்கள். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை எந்தக்காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்தவர் இல்லை என்றும் துரோகம் செய்ய வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை எனவும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

கொந்தளிப்பு
எம்.ஜி.ஆரை நம்பி வாழ்ந்தவர்கள் உண்டே தவிர அவர் யாரை நம்பியும் வாழவில்லை என்றும் எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்தவர்கள் காணாமல் போன வரலாறு துரைமுருகனுக்கு நன்கு தெரியும் எனவும் கூறியிருக்கிறார்கள். துரைமுருகனின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வள்ளுவர் வாக்கு
மேலும், எப்படிப்பட்ட பாவத்தை செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு, செய்நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வழியே இல்லை என்ற வள்ளுவரின் வாக்கினை மனதில் தாங்கி, இனி வரும் காலங்களில் துரைமுருகன் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications