விஸ்வரூபம் எடுக்கும் சசிகலா விவகாரம்.. முற்றுப்புள்ளி வைக்கும் ஓபிஎஸ்- இபிஎஸ்?.. இன்று முக்கிய முடிவு?
சென்னை: விஸ்வரூபம் எடுத்து வரும் சசிகலா விவகாரம் குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
Recommended Video
சசிகலாவை அதிமுக சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் அதிமுகவினர் சசிகலா, தினகரனை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்தனர்.
மறுநாளே ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ ராஜா திருச்செந்தூரில் சசிகலாவை நேரில் போய் சந்தித்தார். இதனால் கட்சியில் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ ராஜாவை ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

சசிகலா
சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என கோவை முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி பகிரங்கமாக கோரியும் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனினும் அடுத்தடுத்து சசிகலாவுக்கான ஆதரவு குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மகளிரணி விழா
இந்த நிலையில் அதிமுக மகளிரணி சார்பில் இன்றைய தினம் மகளிரணி தின விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்று மதிய உணவும் நிர்வாகிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருவரும் ஆலோசனை
இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்தவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளார்கள். முன்னதாக ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் தனியே ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இருப்பர்.

சசிகலா
இதில் முக்கியமாக சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்தும் இவர்கள் ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்றைய தினம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இன்று முக்கிய முடிவு
மதுரையில் விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஸிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பியதற்கு அய்யோ சாமி வாங்க சாமி என அவசர அவசரமாக உள்ளே சென்றுவிட்டார். கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் பேசியதற்கும் நேற்று பேசியதற்கும் ஓபிஎஸ்ஸின் நிலைப்பாட்டில் நிறைய மாற்றம் இருக்கிறது. இதனால் இன்று எப்படியும் சசிகலாவுக்கு எதிரான முடிவையே அதிமுக நிர்வாகிகள் எடுக்கக் கூடும் என தெரிகிறது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications