“பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்கள்”- போட்டு உடைத்த செங்கோட்டையன்
சென்னை: தவெக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பொங்கலுக்கு முன்னதாகவே இணைவார்கள் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பலபேர் பொங்கலுக்கு முன்னரே தவெகவில் இணைய இருக்கின்றனர். பொங்கலுக்கு முன்பாகவே முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள்" என்று கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அங்கம் வகித்தனர். இந்நிலையில், மீண்டும் தற்போது 2026 தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
இதனையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்றன்ரா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் இணைப்பதை விரும்பவில்லை, எனவே பாஜகவும் இவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணி குறித்து நிலைப்பாடு எடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர். இருவரும் தவெக உடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "பொங்கலுக்குள் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறுகையில், "எங்களைப் பற்றி ஒவ்வொரு இயக்கம், கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு கருத்தை சொல்கின்றனர். தவெக, மதம் மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம். நமது பயணம் ஏழை, எளிய மக்களை வாழ வைப்பது, சமநிலையை சமத்துவத்தை உருவாக்குவது என்பதை நோக்கித்தான் இருக்கிறது.
2026ல் தவெக தலைவர் விஜய் ஆட்சியில் அமர்வார். அதனை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. பொங்கலுக்கு முன்பாகவே மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் இணைய இருக்கிறார்கள். அதேபோல், பொங்கலுக்குள் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவார்கள்" எனத் தெரிவித்தார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications