‛கிறுக்கன்’ எனக்கூறிய ஓபிஎஸ்.. ‛பைத்தியக்காரர்’ என விளாசிய வைத்திலிங்கம்..பிரஸ்மீட்டில் டென்ஷன்-பரபர
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியான நிலையில் சென்னையில் இன்று ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அவரது அணியினர் ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் வைத்திலிங்கம் திடீரென டென்ஷனாகி ‛‛பைத்தியக்காரர்கள்'' என்ற வார்த்தையும், ஓ பன்னீர் செல்வம் ‛கிறுக்கன்'' என்ற வார்த்தையையும் பயன்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தீர்ப்பில் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் எனவும், ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும்.

ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை
இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ பன்னீர் செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அரசியலில் மூத்த தலைவராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில்அதிமுக விஷயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

வைத்திலிங்கம் பேட்டி
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். ஓ பன்னீர் செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அவர்கள் அனைவரும் பதில் அளித்தனர். இந்த வேளையில் வைத்திலிங்கம் கூறுகையில், ‛‛இந்த தீர்ப்பை பொறுத்தமட்டில் மேல்முறையீடு என்பது இல்லை. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு என்பது சிவில் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்கை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளரை அங்கீகரிக்க வேண்டும் என அவர்கள் தேர்தல் ஆணையத்தை நாடினால் நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை அங்கு முன்வைப்போம்'' என்றார்.

பைத்தியக்காரர்கள் எனக்கூறி..
இந்த வேளையில், ‛‛அம்மாதிமுக என்ற தனிக்கட்சியை நீங்கள் தொடங்க உள்ளதாக கூறுகிறார்களே?'' என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு வைத்திலிங்கம், ‛‛ நாங்கள் ஏன் தொடங்க வேண்டும். இதனை அரசியலில் இருப்பவர்கள் சொல்லமாட்டார்கள். பைத்தியக்காரர்கள் தான் சொல்வார்கள். இதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

‛கிறுக்கன்' எனக்கூறிய ஓபிஎஸ்
மேலும் இந்த வேளையில், ‛‛திமுகவின் பி டீமாக ஓ பன்னீர் செல்வம் செயல்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் சொல்கிறார்களே?'' என கேள்வி கேட்கப்பட்டது. இந்த வேளையில், ஓ பன்னீர் செல்வம், ‛‛யாராவது கிறுக்கன் சொல்லி இருக்கிறார். அதுபற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்களே?'' என டென்ஷனானார். அதன்பிறகு வைத்திலிங்கம் கூறுகையில், ‛‛தங்கமணி, வேலுமணி மீது போடப்பட்ட வழக்குகள் என்னவாகின. கோடநாடு வழக்கு என்னவாயிற்று?. நாங்கள் அல்ல, அவர்கள் தான் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகின்றனர்'' என காட்டமாக தெரிவித்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications