திமுக கொடுத்த 'ஃபைனல் ஆஃபர்'.. கேட்டதும் அப்படியே ஸ்டன் ஆகி நின்ற ஓபிஎஸ்.. இது நடந்தால் செம ட்விஸ்ட்
சென்னை: திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஆஃபர் ஒன்றின் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கடும் மனக்குழப்பத்தில் இருக்கிறாராம். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம்.
தனக்கு அதிமுகவின் கதவுகள் தனக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதை உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம், தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க எடுத்த 'பகீரத' முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி தனது செல்வாக்கை நிரூபிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. அவரோடு இருந்த முக்கிய தளபதிகள் பலரும் அடுத்தடுத்து திமுக மற்றும் அதிமுக முகாம்களுக்கு தஞ்சம் புகுந்த நிலையில், "காலியான கூடாரத்தை வைத்துக்கொண்டு எதனை நிரூபிப்பது?" என்ற தவிப்பு அவரிடம் மேலோங்கியது. இதற்கு இணையாக அவரது குடும்பத்தினரும் அடுத்தகட்ட நகர்வு குறித்து அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஓபிஎஸ்ஸும் 'ரிஸ்க்' எடுக்காத அரசியலும்
இது குறித்து திமுகவில் இணைந்த அவரது முன்னாள் ஆதரவாளர்கள் தரப்பில் சில சுவாரஸ்யமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன:
"அரசியலில் அதிரடி முடிவுகளை எடுக்கவோ, ரிஸ்க் எடுக்கவோ ஓபிஎஸ் எப்போதும் தயங்குபவர். அதிர்ஷ்டம் தானாக தேடி வரவேண்டும் என்று நினைப்பாரே தவிர, களத்தில் இறங்கி போராடமாட்டார். குறிப்பாக, தேர்தல் அரசியல் என்று வரும்போது தாராளமாக செலவு செய்யத் தயங்குவது அவரது பலவீனம்.
எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். எடப்பாடி அப்படி அல்ல. அதனால்தான் இருவரின் மோதலில் எடப்பாடி வென்றார். இத்தகைய குணாதிசயம் கொண்டவருக்கு இன்றைய வேகமான அரசியலில் மரியாதை கிடைப்பது கடினம். காலம் கடந்த பின் முடிவெடுக்கும் அவரது பாணியால், தன்னை நம்பி வந்தவர்களின் எதிர்காலத்தையும் அவர் கேள்விக்குறியாக்கினார். இதனால்தான் பலர் அவரை விட்டு விலகினர்."
ஸ்டாலினுடன் ரகசிய சந்திப்பும், 'ஷாக்' கொடுத்த கோரிக்கையும்
தனித்து இயங்க முடியாது என்பதை உணர்ந்த ஓபிஎஸ், திமுகவின் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். சமீபத்திய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவரது ஆதரவாளர் எம்.எல்.ஏ அய்யப்பன் முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது இதன் தொடக்கப்புள்ளி. இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் முதலமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்து ஆலோசித்தார்.
முதல் சந்திப்பின் போது, "நீங்கள் தயங்காமல் கட்சியில் இணையுங்கள், உங்கள் கௌரவத்திற்கு பங்கம் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என ஸ்டாலின் கனிவுடன் கூறியுள்ளார். ஆனால், ஓபிஎஸ் வைத்த கோரிக்கைகள் திமுக தலைமையையே அதிரவைத்தன:
திமுகவில் 'இணைப் பொதுச்செயலாளர்' பதவி வேண்டும்.
தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட 7 இடங்கள் ஒதுக்க வேண்டும்.
திமுகவில் அப்படி ஒரு பதவியே இல்லாத சூழலில், ஓபிஎஸ்ஸின் இந்த 'மெகா' எதிர்பார்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், "பிறகு பேசலாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இது குறித்து ஸ்டாலின் தனது சீனியர் நிர்வாகிகளிடம் விவரித்தபோது, அவர்கள் கிண்டலாக சிரித்ததுடன், ஓபிஎஸ்ஸின் எதிர்பார்ப்பு எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக கொடுத்த 'ஃபைனல் ஆஃபர்'
மறுநாள் நடந்த இரண்டாவது சந்திப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் தெளிவான ஒரு வாய்ப்பை (Offer) ஓபிஎஸ் முன் வைத்தார். "நீங்கள் முதலமைச்சராக இருந்தவர், உங்களை குறைத்து மதிப்பிட மாட்டோம். எனவே, உங்களுக்கு சபாநாயகர் பதவியை வழங்குகிறோம். இது சி.எம்-க்கு இணையான அந்தஸ்து கொண்ட பதவி. மேலும், உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்களுக்கும் சேர்த்து மொத்தம் 3 இடங்கள் தரப்படும். முதலில் கட்சியில் இணையுங்கள், மற்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சசிகலாவின் வருகையும் ஓபிஎஸ்ஸின் குழப்பமும்
இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என தனது குடும்பத்தினருடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த வேளையில், அரசியல் களம் மீண்டும் மாறியது. சசிகலா தனிக்கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து நடத்திய பொதுக்கூட்டம் பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளது. சசிகலா காட்டிய அந்த 'மாஸ்' ஓபிஎஸ்ஸை மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.
தற்போது ஓபிஎஸ் முன்னால் இரண்டு வழிகள் உள்ளன:
ஸ்டாலின் கொடுத்த 'சபாநாயகர்' கௌரவத்தை ஏற்று திமுகவில் ஐக்கியமாவது.
அல்லது மீண்டும் சசிகலாவுடன் கைகோர்த்து அதிமுகவை மீட்கும் போரில் ஈடுபடுவது.
எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல், ஓபிஎஸ் மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். திமுக தரப்போ, "அவர் ஓரிரு நாட்களில் ஒரு முடிவோடு வருவார்" என நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
-
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
அண்ணாமலை மிஸ்ஸிங்.. அமித் ஷா பிளான்.. அடுத்து என்ன? அண்ணாமலை எடுக்கும் முடிவு இதுதான்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம்












Click it and Unblock the Notifications