பன்னீரை பரிதவிக்க விட்ட பாஜக.. இருந்த ஒரே நம்பிக்கையும் போச்சு! ஒரே குரலாய் ஒலித்த ’அவருடன்’ கூட்டணி
சென்னை: சென்னையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிக்கப்படும் என கூறி இருக்கிறார் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம். இந்த நிலையில் நிர்வாகிகளிடம் அடுத்து என்ன செய்யலாம் என ஓபிஎஸ் கருத்து கேட்ட நிலையில் பலரும் தவெக, நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் பேச்சை கேட்டு தான் தனியாக வந்தேன், இப்போது எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு ஏன் என பாஜகவிடம் ஓபிஎஸ் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் தற்போதே தொடங்கி விட்டன. திமுக கூட்டணியை பொறுத்தவரை அது ஏற்கனவே அமைந்தது தான். 2019 ஆம் ஆண்டிலிருந்து அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. புதிதாக எந்த கட்சியும் சேரவில்லை, கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறவும் இல்லை.
இது ஒரு புறம் இருக்க அதிமுக கூட்டணி தான் மாறி மாறி அமைந்தது. மக்களவைத் தேர்தலில் இருந்த பாஜக அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெளியேறியது. பாமகவும் தனித்து போட்டியிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக - பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுகவோ தேமுதிக உள்ளிட்ட கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

குறிப்பாக பாஜக கூட்டணியில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வமும் முறையே தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். அதே நேரத்தில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அதிமுக பாஜக கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் அதிமுக தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம் என பாஜக கூறியுள்ளது. மேலும் தொகுதி பங்கீடு முதல்வர் வேட்பாளர் என அனைத்தையுமே எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் கீழ் தான் சந்திப்போம் என அதிமுகவினரும் பாஜகவினரும் கூறி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த பாமக மீண்டும் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரது நிலைப்பாடு என்ன என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இருவரையும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். மேலும் கூட்டணியிலும் அவர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கண்டிஷன் என்கின்றனர் பாஜகவினர்.
அதே நேரத்தில் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம், கூட்டணியில் இருந்தால் என்ன பிரச்சனை என எடப்பாடி பழனிச்சாமி இடம் பாஜக கூறியதோடு நிச்சயம் அவர்கள் கூட்டணியில் இருப்பார்கள் என கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே டிடிவி தினகரன் தீவிர பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் இன்று சென்னையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து இருக்கிறார்.
அப்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக படிவம் ஒன்று தரப்பட்டிருக்கிறது. அதில் பெயர், விவரம், பதவி உள்ளிட்டவற்றோடு அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிய உங்கள் கருத்து? பாஜக கூட்டணியில் தொடரலாமா? என்பது குறித்து உங்கள் கருத்து என இரு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் விஜயின் தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எழுதிக் கொடுத்தார்களாம். வெகு சிலரே பாஜக கூட்டணியில் தொடர வேண்டும் என கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை வைத்தே நாளை கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ வைத்தியலிங்கம். இதற்கிடையே மக்களவைத் தேர்தல் வரை பாஜகவுக்கும் அதற்கு முன்னதாகவும் தீவிர ஆதரவு தெரிவித்து வந்த தன்னை அதிமுக கூட்டணி அமைந்த பிறகு கண்டுகொள்ளவில்லை என்பது ஓ பன்னீர் செல்வத்தின் எண்ணமாக இருக்கிறது. மேலும் டெல்லிக்கு சென்று பலமுறை பாஜக தலைமையை தொடர்பு கொள்ள முயன்றும் அது கை கொடுக்காததால் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு தன்னை பாஜக கைவிட்டு விட்டதாகவே ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். அதிமுக கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை. திமுகவுடன் கூட்டு சேர முடியாது தன்னை நம்பி விஜயும் சீமானும் வருவார்களா? என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் எண்ணமாக இருக்கிறது. இதனால் மிகுந்த குழப்பத்தில் இருக்கும் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங்












Click it and Unblock the Notifications