சசிகலா வருகை... அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை
சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுடன் உடன் ஓபிஎஸ் ஈபிஎஸ் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
சென்னை: பெங்களூருவில் தங்கி உள்ள சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி சென்னை வர உள்ள நிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Recommended Video

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதனிடையே கொரோனாவிலிருந்து மீண்ட அவர், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெங்களுருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக சசிகலா மீதும், டிடிவி தினகரன் மீதும் இன்றைய தினம் டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர்.
சசிகலா விடுதலையான நாளில் இருந்தே பல மாவட்டங்களிலும் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவானவர்களை ஒவ்வொருவராக கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர்.சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அதிருப்தி அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி வரும் நிலையில் , மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சசிகலா தமிழகம் வந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுகவை மீட்டெடுப்பார் என்று தினகரன் கூறி வருகிறார். சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாரா? அப்படி வரும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்றும் இன்று ஆலோசிக்கப்பட்டது. அது தவிர சட்டசபைத் தேர்தலுக்கான வியூகம், கூட்டணி பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications